பாகுபலி-2 சாதனை முறியடிப்பு..5 வருடங்களில் இல்லாத சாதனை.. தொடர் வெற்றியில் விக்ரம்.. கமல் உற்சாகம்
சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம்.
இந்தப் படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் தற்போது 17 நாட்களை கடந்துள்ளது.
இந்த 17 நாட்களில் சர்வதேச அளவில் வசூல்வேட்டை நடத்தி வருகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான கமல் மிகவும் உற்சாகத்தில் உள்ளார்.

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, மைனா நந்தினி, மகேஸ்வரி, காயத்ரி, ஷிவானி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விக்ரம். இந்தப் படத்தின் மேக்கிங், திரைக்கதை உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
Recommended Video

சிறிய கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம்
படத்தில் காளிதாஸ் ஜெயராம், தர்ஷன், ஏஜென்ட் டீனா, சந்தான பாரதி உள்ளிட்ட சிறிய கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த கேரக்டரையும் லோகேஷ் வீணாக்கினார் என்ற விமர்சனம் அவருக்கு கிடைக்கவில்லை. மாறாக படத்தில் உயிரற்ற பால் பாட்டிலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

100 சதவிகிதம் சுதந்திரம்
இந்த படத்தை இயக்குவதில் தனக்கு 100 சதவிகிதம் முழு சுதந்திரம் இருந்ததாகவும் கமல்ஹாசன் அந்த சுதந்திரத்தை தனக்கு முழுமையாக தந்ததாகவும் அதனால்தான் படம் 100 சதவிகிதம் தன்னுடைய படமாக வெளியானதாகவும் லோகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார். எப்போதுமே தன்னுடைய படங்களில் கமலின் தலையீடு இருக்கும் என்பது இந்தப் படத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

சிறப்பாக பயன்படுத்திய லோகேஷ்
ஆனால் இந்த சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி சிறப்பான படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மிரட்டலான திரைக்கதை மட்டுமின்றி லோகேஷ் யூனிவர்ஸ் என்ற ஒன்றையும் இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார் லோகேஷ். இந்த வித்தியாசமான முயற்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

17 நாட்கள் வெற்றிகரம்
தற்போது படத்தின் தனித்தன்மையால் படம் கடந்த 17 நாட்களாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. படம் 3 வாரயிறுதிகளை திரையரங்குகளில் கடந்துள்ளது. தற்போது சர்வதேச அளவில் 365 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே கடந்த 17 நாட்களில் 160 கோடிகளையும் தாண்டியுள்ளது.

பாகுபலி 2 படத்தை முந்தியது
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழகத்தில் முன்னதாக வசூல் சாதனை செய்து முதலிடத்தில் இருந்த பாகுபலி 2 படத்தை 17 நாட்களிலேயே விக்ரம் முறியடித்து தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. வெளிநாடுகளில் 120 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தொடர் வசூல் சாதனை
ஆந்திரா, தெலங்கானாவில் 27 கோடிகளையும் கேரளாவில் 34 கோடிகளையும் கர்நாடகாவில் 19 கோடிகளையும் மற்ற மாநிலங்களில் 9 கோடிகளையும் தாண்டி விக்ரம் படம் கடந்த 17 நாட்களில் வசூலித்துள்ளது. தொடர்ந்து மேலும் பல வசூல் சாதனைகளை இந்தப் படம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











