ஒன்றியத்தின் தப்பாலே.. கமலோட பத்தல பத்தல பாடல்.. நாளை வெளியாகும் வீடியோ சாங்!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகிளில் வெளியானது விக்ரம் படம்.

Recommended Video

Kamal Haasan | ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் *Kollywood | Filmibeat Tamil

இந்தப் படம் சிறப்பான அதிர்வுகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியதுடன் வசூல்மழையையும் பொழிந்து வருகிறது.

ரசிகர்களின் தொடர் ஆதரவுடன் திரையரங்குகளில் சிறப்பாக ஓடி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள நிலையில் படம் சிறப்பான வசூலுடன் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் அரங்கு கொள்ளாத காட்சிகளாக ஓடி வருகின்றன.

 ரசிகர்களின் சாய்ஸ்

ரசிகர்களின் சாய்ஸ்

கடந்த வாரத்தில் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் சிறப்பான படங்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இந்தப் படங்களால் விக்ரம் படத்துடன் போட்டி போட முடியவில்லை. தற்போதும் விக்ரம் படத்திற்குதான் முதல் சாய்ஸ் என்று ரசிகர்கள் உற்சாகம் தெரிவிக்கின்றனர். மாமனிதன், பட்டாம்பூச்சி, வேழம் என திரையரங்குகளில் படங்கள் ரிலீசாகியுள்ளன.

அனிருத் இசை

அனிருத் இசை

இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் ஓடி வருகிறது விக்ரம். அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப் படத்தின் பத்தல பத்தல பாடல் திரையில் பாதியளவே இடம்பெற்றுள்ளது.

கமலின் சூப்பர் எனர்ஜி

கமலின் சூப்பர் எனர்ஜி

இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும் இந்தப் பாடலில் கமலின் எனர்ஜி அவர்களை வெகுவாக ரசிக்க செய்துள்ளது. கமலின் நடிப்பிலேயே வெளியான சில படங்களின் ஓபனிங் பாடல்களை இந்தப் பாடல் நினைவு படுத்தினாலும் தனது 70 வயதுகளில் இந்த பாடலை இத்தகைய எனர்ஜியுடன் நடனமாட கமலால் மட்டுமே முடியும்.

 ஒன்றியத்தின் தப்பாலே வரிகள்

ஒன்றியத்தின் தப்பாலே வரிகள்

இந்தப் பாடல் படத்தில் பாதியளவே இடம்பெற்றது. முன்னதாக ஒன்றியத்தின் தப்பாலே, ஒண்ணியும் இல்ல இப்பாலே என்ற வரிகள், படத்தில் பார்க்க முடியவில்லை. இந்த வரிகள் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த வரிகளை நீக்க பலரும் அறிவுறுத்தினர்.

 பத்தல பத்தல வீடியோ பாடல்

பத்தல பத்தல வீடியோ பாடல்

இந்நிலையில் நாளைய தினம் பத்தல பத்தல என்ற இந்தப் பாடல் வெளியாக உள்ளது. வீடியோ பாடலாக வெளியாகும் இந்தப் பாடலில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. கமலின் முழு எனர்ஜியோடு உருவாகியுள்ள இந்தப் பாடலை கண்டுகளிக்க ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X