ஓடிடியில் இன்றிரவு வெளியாகும் விக்ரம்.. எத்தனை மணிக்கு தெரியுமா? காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டம்!

சென்னை : சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது கமல்ஹாசனின் விக்ரம் படம்.

இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி தற்போது ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

படத்தின் வசூல் 400 கோடி ரூபாய்களுக்கும் மேல் காணப்படுகிறது. தொடர்ந்து சக்சஸ்புல்லான காட்சிகளாக இந்தப் படம் ஓடி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் கடந்த மாதம் 3ம் தேதி ரிலீசாகி ஒரு மாதத்தை கடந்து தற்போதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் சிறப்பான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

அதிகமான நடிகர்கள்

அதிகமான நடிகர்கள்

படத்தில் அதிகமான கேரக்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவரும் அவரவர் கேரக்டர்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். படத்தில் சிறுவன் தர்ஷன் முதல்கொண்டு அனைத்து கேரக்டர்களும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. இந்தக் கேரக்டர்களை திரையில் சிறப்பாக கொண்டுவர லோகேஷ் கனகராஜ் எவ்வாறு மெனக்கெட்டிருப்பார் என்பது இந்தக் கேரக்டர்களின் மூலம் தெரியவருகிறது.

வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பு

வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பு

இந்தப் படம் சர்வதேச அளவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் வட இந்தியா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சிறப்பான வரவேற்பையும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது.

நள்ளிரவு ஓடிடியில் ரிலீஸ்

நள்ளிரவு ஓடிடியில் ரிலீஸ்

இந்நிலையில் தற்போது இந்தப் படம் ஓடிடியில் இன்று நள்ளிரவு முதல் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் பார்த்தவர்களும் இந்தப் படத்தை தங்களது இல்லங்களில் ஹோம் தியேட்டர் வசதியுடன் பார்க்க மிகவும் விருப்பத்துடன் காத்திருக்கின்றனர். அதேபோல தவிர்க்க முடியாத சூழல்களில் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாதவர்கள் தற்போது ஓடிடி ரிலீசால் பார்த்துக் கொள்ளலாம்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியீடு

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியீடு

இந்தப் படம் இன்று நள்ளிரவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் வெளியாகவுள்ளது. சரியாக 12 மணியளவில் படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிலீசுக்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப்படம் ஓடிடியில் வெளியானவுடன் அதிகமான வியூஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்ப்பு

ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்ப்பு

ஓடிடியிலும் அதிகமான ரசிகர்களை ஈர்த்த, அதிகமாக பார்க்கப்பட்ட படங்களில் வரிசையில் விக்ரம் படம் கண்டிப்பாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் வெளியாகி அதிகமான ரசிகர்களை ஈர்த்த விக்ரம் படம் அடுத்ததாக ஓடிடியிலும் சிறப்பான வரவேற்பை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Recommended Video

Kamal Haasan | ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் *Kollywood | Filmibeat Tamil
சிம்ப்ளி சவுத்தில் வெளியீடு

சிம்ப்ளி சவுத்தில் வெளியீடு

இந்திய அளவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் ஓடிடி ரிலீசாக வெளியாகும் விக்ரம் படம் வெளிநாடுகளில் சிம்ப்ளி சவுத் ஆப்பில் வெளியாக வெளியாகவுள்ளதாக தற்போது கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X