ஜுன் 3ல் கமலின் விக்ரம் ரிலீஸ்...அட்டகாசமாக அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் ஃபிலிம்ஸ்
சென்னை : கமல், விஜய் சேதுபதி நடித்துள்ள விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல். மேக்கிங் க்ளிம்ப்ஸ் உடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். ஆக்ஷன் த்ரில்லர் படமான விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜே எழுதி, இயக்கி உள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலுடன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன், செம்பன் வினோத் ஜோஸ், மகேந்திரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விக்ரமில் 3 தீம் மியூசிக்
விக்ரம் படத்தில் டைட்டில், டீசருடன் 2020ம் ஆண்டு கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ம் தேதி வெளியிடப்பட்டது. 1986ல் கமல் நடித்து வெளிவந்த விக்ரம் படத்தின் தீம் மியூசிக்கை ரீமிக்ஸ் செய்து இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளனர். வழக்கமாக ஹீரோ மற்றும் வில்லனுக்கு தான் தீம் மியூசிக் அமைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள கமல், விஜய்சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசிலுக்கு என தனித்தனியே தீம் மியூசிக் அமைத்துள்ளார்களாம்.

மீண்டும் காக்கி சட்டை போட்ட கமல்
2006 ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு விக்ரம் படத்தில் மீண்டும் காக்கிச் சட்டை போட்டுள்ளார் கமல்ஹாசன். விக்ரம் படத்தின் ஷுட்டிங் காரைக்குடியில் துவங்கப்பட்டு, புதுச்சேரி, சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது. முதலில் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், பிறகு மார்ச் மாதத்திலேயே ரிலீஸ் செய்யலாமா என யோசித்தனர். ஆனால் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிய சிறிது தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 14 ம் தேதி அறிவிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் இந்தியா நெட்வொர்க் ரூ.112 கோடிக்கு வாங்கி உள்ளது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ்
இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பாளர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் தேதி அறிவிப்பிற்கே தேதி அறிவித்து எதிர்பார்ப்பை எகிற வைத்தனர். டைரக்டர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான மார்ச் 14 ம் தேதி காலை 7 மணிக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்தனர். ரிலீஸ் தேதி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு வந்தது ராஜ்கமல் ஃபிலிம்ஸ்.

விக்ரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்நிலையில் இன்று காலை விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் விக்ரம் படம் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் மிரட்டல் இசையுடன் உருவாக்கப்பட்ட விக்ரம் மேக்கிங் க்ளிம்ப்ஸ் உடன் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதை கமலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











