twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜீத்தின் வலிமை, விஜயின் பீஸ்ட்டை வேட்டையாடி விளையாடிய கமல்ஹாசனின் விக்ரம்! வசூலில் ஓவர்டேக்!

    |

    சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் அவருக்கு சிறப்பான வசூலை தொடர்ந்து பெற்றுத் தந்து வருகிறது.

    இந்நிலையில் அதிகமாக வசூலை ஈட்டிய தமிழ் படங்களில் முதல் 5 படங்களின் பட்டியலில் தற்போது விக்ரம் முன்னேறியுள்ளது.

    இந்த ஆண்டில் வெளியான படங்களிலும் விக்ரம் படம் அதிக வசூலை ஈட்டிய படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    ஐ லவ்யூ வேணா சொல்றேன்.. கல்யாணம் பண்ண சொல்லி கம்பல் பண்ணாதீங்க.. கடுப்பான மாளவிகா மோகனன்! ஐ லவ்யூ வேணா சொல்றேன்.. கல்யாணம் பண்ண சொல்லி கம்பல் பண்ணாதீங்க.. கடுப்பான மாளவிகா மோகனன்!

    நடிகர் கமல்ஹாசன்

    நடிகர் கமல்ஹாசன்

    நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலகப் பயணத்தை துவங்கினார். தொடர்ந்து உதவி நடன இயக்குநர் என பல பாதைகளை கடந்து தன்னை சிறப்பான நடிகராக கோலிவுட்டில் மட்டுமில்லாமல் உலகளவில் நிலைநிறுத்தி உலக நாயகனாக தன்னை முன்னேற்றிக் கொண்டார்.

    கொண்டாடும் திரையுலகம்

    கொண்டாடும் திரையுலகம்

    இவரிடம் இருந்து கற்பதற்கு அதிகமான விஷயங்கள் இருப்பதாக திரையுலகமே கொண்டாடி வருகிறது. தற்போது இந்த வயதிலும் இவரது எனர்ஜி இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையிலேயே காணப்படுகிறது. இவரிடம் நேரிடையாக பயிற்சி பெறவில்லை என்ற போதிலும் அவரது படங்களை பார்த்தே தான் இயக்குநராக மாறியதாக சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

    சிறப்பான உதாரணம்

    சிறப்பான உதாரணம்

    யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் வங்கியில் பணிபுரிந்த ஒருவர், சர்வதேச அளவில் இயக்குநராக மாறுவதற்கு கமலின் படங்கள் உதவியுள்ளன என்றால், அவரது படங்கள் குறித்து யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை. இதுவே சிறப்பான உதாரணமாக இருக்கும்.

    ரசிகனான லோகேஷ்

    ரசிகனான லோகேஷ்

    தான் பார்த்து ரசித்த மாபெரும் நடிகரை தானே இயக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் சும்மா விடுவாரா லோகேஷ். அவரை வைத்து சிறப்பான திரைக்கதையை தந்து ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார். தற்போது விக்ரம் படத்தை ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர். இந்தக் கொண்டாட்டத்திற்கு முற்றிலும் தகுதியான படமாகவே விக்ரம் காணப்படுகிறது.

    சிறப்பான வசூல்

    சிறப்பான வசூல்

    கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான இந்தப் படம் தொடர்ந்து வசூல்வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டில் வெளியான சிறப்பான வசூலை குவித்துள்ள தமிழ் படங்களில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து முதலிடத்திற்கு தாவியுள்ளது விக்ரம் படம். அடுத்த 3 இடங்களில் வலிமை, பீஸ்ட் மற்றும் டான் படங்கள் காணப்படுகின்றன.

    முதலிடத்தில் விக்ரம்

    முதலிடத்தில் விக்ரம்

    இதில் வலிமை 200 +, பீஸ்ட் 150 + மற்றும் டான் 100 + கோடி ரூபாய்களை வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தற்போது விக்ரம் படம் தொடர்ந்து 25வது நாளை எட்டவுள்ள நிலையில், இன்றும் நாளையும் வாரயிறுதி நாட்களில் இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

    சென்னையின் பெஸ்ட் படம்

    சென்னையின் பெஸ்ட் படம்

    இதனிடையே சென்னையில் வெளியாகி இதுவரை அதிக வசூலை எட்டியுள்ள தமிழ் படங்களில் முதல் 5 இடங்களை விக்ரம் படம் எட்டியுள்ளது. இந்த லிஸ்ட்டில் விஜய், அஜித் படங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு விக்ரம் படம் முன்னேறியுள்ளது. இந்த லிஸ்டில் முதலிடத்தில் 24.65 கோடி ரூபாய் வசூலுடன் முதலிடத்தில் ரஜினியின் 2.ஓ படம் உள்ளது.

    5வது இடத்தில் விக்ரம்

    5வது இடத்தில் விக்ரம்

    பாகுபலி படம் 18.85 கோடி ரூபாய் கலெக்ஷனுடன் இரண்டாவது இடத்திலும் ரூ. 15.68 கோடி வசூலுடன் பேட்ட படம் 3வது இடத்திலும் 4வது இடத்தில் தர்பார் 15.18 கோடி ரூபாயுடனும் 5வது இடத்தில் தற்போது 15.08 கோடி ரூபாய் வசூலுடன் விக்ரம் படமும் காணப்படுகிறது. விக்ரம் படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், இந்த பட்டியலில் மேலும் முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம்.

    English summary
    Actor kamal's vikram movie is in the top with highest collection in Worldwide
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X