twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேஜிஎஃப் 2 க்கு டஃப் கொடுக்கும் கமலின் விக்ரம்...வசூலிலும் மிரட்டுறாங்களே

    |

    சென்னை : கமலின் விக்ரம் படம் தொடர்ந்து முந்தைய பல படங்களின் சாதனையை முறியடித்து வருகிறது. இது தமிழ் சினிமா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

    தெலுங்கு படமான ஆர்ஆர்ஆர், கன்னட படமான கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் வசூல் சாதனை படைத்த நிலையில், தமிழில் ரிலீசான பல படங்கள் போட்ட பணத்தை திரும்ப எடுக்கவே திணறி வந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் ஒரு வெற்றி படமாக கமலின் விக்ரம் வந்துள்ளது.

    விஜய் படங்களை பார்க்காமல் புறக்கணியுங்கள்...மதுரை ஆதீனம் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா? விஜய் படங்களை பார்க்காமல் புறக்கணியுங்கள்...மதுரை ஆதீனம் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா?

    இவ்வளவு தான் வசூலா

    இவ்வளவு தான் வசூலா

    டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசானது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த படத்திற்கு அனைத்து தரப்பிலும் பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளது. விக்ரம் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 30 கோடிகளை மட்டுமே வசூல் செய்தது. இதனால் இவ்வளவு ப்ரொமோஷன் செய்தும் இவ்வளவு குறைந்த தொகையை தான் வசூல் செய்துள்ளதா என பலர் கிண்டலாக கேட்டு வந்தனர்.

    அடிச்சு தூக்கிய விக்ரம்

    அடிச்சு தூக்கிய விக்ரம்

    ஆனால் வார இறுதி நாளான சனிக்கிழமை, அதாவது படம் ரிலீசான இரண்டாவது நாளில் விக்ரம் படத்தின் வசூல் அதிகரித்து, உலக அளவில் 100 கோடி கிளப்பில் இணைந்தது. மூன்றாவது நாளான நேற்று, உலக அளவில் விக்ரம் படம் 150 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளது.

    தமிழகத்தில் விரைவில் 100 கோடி

    தமிழகத்தில் விரைவில் 100 கோடி

    கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் விக்ரம் படம் 60 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனால் விரைவில் தமிழகத்திலும் 100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை படங்களை பின்னுக்கு தள்ளி இரண்டே நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது விக்ரம் படம்.

    கேஜிஎஃப் 2 கே ஆப்பா

    கேஜிஎஃப் 2 கே ஆப்பா

    இந்நிலையில் விரைவில் தமிழகத்தில் கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் சாதனையையும் விக்ரம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கேஜிஎஃப் 2 படம் இதுவரை 105 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் விக்ரம் படம் இன்னும் ஓரிரு நாட்களில் 100 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Kamalhaasan's Vikram movie collects 150 crore worldwide in past 3 days . In India Vikram collection reaches 100 crore. Expected to soon in Tamilnadu collection Vikram will beats KGF 2 collection. Now Vikram collects 60 crores in tamilnadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X