ரஜினியின் அண்ணாத்த கலெக்ஷனை தொட்ட கமலின் விக்ரம்...கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : ரிலீசான முதல் நாளிலேயே கமலின் விக்ரம் படம், ரஜினியின் அண்ணாத்த பட கலெக்ஷனை எட்டி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடினாலும் நெட்டிசன்கள், கிண்டல் செய்து வருகின்றனர்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று, பாசிடிவ் விமர்சனங்களையே பெற்றுள்ளது. இந்த படம் முதல் நாளில் எத்தனை கோடிகளை வசூல் செய்யும், வசூல் சாதனை படைக்குமா என்பதை தான் பலர் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர்.

விக்ரம் முதல் நாள் வசூல்

விக்ரம் முதல் நாள் வசூல்

கமல் நான்கு ஆண்டு இடைவேளைக்கு பிறகு பெரிய திரைக்கு வந்துள்ள விக்ரம் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் படம் முதல் நாளில் 30 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 7 கோடிகளை விக்ரம் படம் வசூல் செய்துள்ளது. கொரோனாவிற்கு பிறகு சென்னையில் ஓப்பனிங் நாளில் அதிகம் வசூல் செய்த டாப் 3 படங்களில் விக்ரமும் இடம்பிடித்து விட்டது.

அண்ணாத்த படத்தை தொட்ட விக்ரம்

அண்ணாத்த படத்தை தொட்ட விக்ரம்

இதுவரை சென்னையில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் பீஸ்ட், வலிமை, விக்ரம், அண்ணாத்த ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. ரஜினியின் அண்ணாத்த படம் முதல் நாளில் ரூ.1.71 கோடிகளை வசூல் செய்தது. அந்த வசூலை கமலின் விக்ரம் படமும் பெற்றுள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் மட்டுமே ஓப்பனிங் நாளில் அதிக வசூலை பெற முடியும் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

இவ்வளவு தான் வசூலா

இவ்வளவு தான் வசூலா

விக்ரம் படத்தின் முதல் நாள் வசூலை ரசிகர்கள் கொண்டாடினாலும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அண்ணாத்த படம், தியேட்டர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையிலும் 1.71 கோடியை வசூல் செய்துள்ளது. ஆனால் விக்ரம் படம் 100 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அதே அளவு வசூலை தான் பெற்றுள்ளது. அதில் நான்கு ஹீரோக்கள், சர்வதேச அளவில் இந்த அளவிற்கு ப்ரொமோஷன் செய்தும் இவ்வளவு தான் வசூலாகி உள்ளதா.

Recommended Video

Vikram Review | Yessa ? Bussa ? | Kamal Haasan #Review
 அண்ணாத்த படத்துடன் ஒப்பிடாதீர்கள்

அண்ணாத்த படத்துடன் ஒப்பிடாதீர்கள்

அண்ணாத்த படத்துடன் விக்ரம் படத்தை ஒப்பிடவே செய்யாதீர்கள். மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் விக்ரம் படம் இவ்வளவு தான் வசூல் செய்துள்ளது. ஆனால் அண்ணாத்த படம் எந்த வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, இந்த அளவிற்கு வசூல் செய்துள்ளது என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X