உலகநாயகனோட விக்ரம் படத்தோட அடுத்தடுத்த பிரமோஷன்கள்... அடுத்தடுத்த அப்டேட்கள்... கலக்கல் ரிப்போர்ட்ஸ்

சென்னை : உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம். அவரது தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில் படம் வரும் ஜூன் 3ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

உலகநாயகன் கமல்

உலகநாயகன் கமல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதாவது ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகவுள்ள படம் விக்ரம். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படம் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.

மோதிரக்கையில் குட்டு

மோதிரக்கையில் குட்டு

இந்நிலையில் மோதிரக் கையில் குட்டுப்பட தான் 36 ஆண்டுகள் காத்திருந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அதாவது படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமல் தன்னை பாராட்டியதாக அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய இத்தனை ஆண்டுகால தவம் தற்போது பூர்த்தியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கமலின் தீவிர ரசிகன்

கமலின் தீவிர ரசிகன்

கமலின் தீவிர ரசிகன் தான் என முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தப் படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பே படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு துவக்கியுள்ளது. லோக்கோ ரயில்களில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் ரிலீஸ் குறித்த டிசைன்கள் பதியப்பட்டன.

நிறைவடைந்த டப்பிங் பணிகள்

நிறைவடைந்த டப்பிங் பணிகள்

இந்நிலையில் தற்போது படத்தின் ஒட்டுமொத்த டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர் வரும் 15ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து படம் சிறப்பான பிரமோஷன்களை செய்து வருகிறது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

படம் வெளியாக இன்னும் ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர். படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக ட்ரெயிலருக்காக காத்திருக்கின்றனர்.

அனிருத் இசை

அனிருத் இசை

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலுடன் படத்தில் விஜய் சேதுபதி, நரேன், பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள நிலையில், அனைவரும் சிறப்பான நடிகர்கள் என்பதால் அதுவும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களிடையே படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிகவும் கூலாக நடந்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஹீரோவாக லோகேஷ்?

ஹீரோவாக லோகேஷ்?

அவர் அந்த வீடியோவில் தன்னுடன் செல்பி எடுக்க முயலும் ரசிகர்களிடையே மிகவும் இயல்பாக மற்றும் கூலாக நடந்துக் கொள்கிறார். ஏற்கனவே கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தின் ரிலீசுக்கு பிறகு மேலும் அதிகமாக ரசிகர்களை பெறுவார் என்றும் அவர் படங்களில் ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X