இந்தி- ஒரே நாள் வசூலில் ரஜினியின் ரோபோவை முந்திய 'விஸ்வரூப்'

By Siva

மும்பை: வட இந்தியாவில் ரிலீஸான முதல் நாள் வசூலில் கமலின் விஸ்வரூப் ரஜினிகாந்தின் ரோபாவை முந்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், ஏன் பிற நாடுகளிலும் ஹிட்டாகும். அவர் அந்தளவுக்கு பிரபலம். அவர் என்ன தான் மசாலா படத்தில் நடித்தாலும் அது ஓடிவிடும். அதற்கு நேர் எதிர் அவரின் நண்பர் கமல் ஹாசன். படத்திற்கு படம் வித்தியாசம், புதுமை காட்ட விரும்புபவர். அதனால் அவருடைய அத்தனை படங்களும் ஓடும் என்று சொல்லிவிட முடியாது.

இந்நிலையில் தான் விஸ்வரூபம் படத்தை தானே தயாரித்து இயக்கினார். படத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளது என்று கூறி தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசும் படத்திற்கு 2 வார தடை விதித்தது. தற்போது தான் ஒரு வழியாக பிரச்சனைகள் தீர்ந்துள்ளது.

இதையடுத்து வரும் 8ம் தேதி படம் தமிழகத்தில் ரிலீஸாகலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே படம் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 1ம் தேதி ரிலீஸான விஸ்வரூப்

பிப்ரவரி 1ம் தேதி ரிலீஸான விஸ்வரூப்

பிப்ரவரி மாதம் 1ம் தேதி விஸ்வரூபம் இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் வெளியானது.

தமிழக அரசின் தடை ஒரு வகையில் நல்லதாப் போச்சு

தமிழக அரசின் தடை ஒரு வகையில் நல்லதாப் போச்சு

தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவால் படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதைப் பார்த்துவிடும் ஆர்வம் ரசிகர்களுக்கு வந்துவிட்டது. அதனால் விஸ்வரூப் ரிலீஸான அன்று வடநாட்டு தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழக அரசின் தடை படத்திற்கு ஒரு வகையில் நல்லதாகிவிட்டது.

முதல் நாள் வசூலில் ரோபோவை முந்திய விஸ்வரூப்

முதல் நாள் வசூலில் ரோபோவை முந்திய விஸ்வரூப்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் இந்தியில் ரோபோ என்ற பெயரில் வெளியானது. படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 1.75 கோடி வசூல் செய்தது. ஆனால் விஸ்வரூப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1.89 கோடி. இதன் மூலம் விஸ்வரூப் ரோபோவை முந்திவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X