விஸ்வரூபம் 2... மீண்டும் டிடிஎச்.. காலவரையறையின்றி தள்ளிப் போன உலகநாயகனின் கனவுப் படம்!!

By Shankar

சென்னை: இன்னார் படம் என்றில்லாமல்... உச்ச நட்சத்திரம் தொடங்கி, மிச்ச நட்சத்திரங்கள் வரை அத்தனைப் பேரும் படங்களும் சிக்கலுக்குள்ளாகின்றன.

இன்றைய சினிமா சூழல் அந்த அளவு நச்சுத்தன்மை மிக்கதாகிவிட்டது.

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர், பைனான்ஸியர் என எல்லோருக்குமே அவரவர் பாதுகாப்பு முக்கியம்தான், மறுப்பதற்கில்லை! ஆனால் இப்படி எல்லோரது பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டிருக்கும் போது, படம் வெளியாக முடியாமல் நீண்டகாலம் கிடப்பில் போடப்படுகிறது. இதற்கு ஒரு பொதுவான தீர்வு வரும்வரை இந்த சிக்கல் தீர வழியில்லை போலிருக்கிறது.

கோச்சடையானும் விஸ்வரூபம் 2-ம்

கோச்சடையானும் விஸ்வரூபம் 2-ம்

சமீப நாட்களாக ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் சிக்கல் பற்றியே பேசிக் கொண்டிருந்ததில், மறந்து போன விஷயம் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2.

இந்தப் படமும் இதோ அதோ என இழுத்துக் கொண்டே இருக்கிறது. எப்போது வரும் என்று கமலுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. விஸ்வரூபத்தை விட, அதன் இரண்டாம் பாகம் வெளியாவதில்தான் பெரும் சிக்கல் இருக்கிறது என்கிறார்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள்.

தள்ளித் தள்ளித் தள்ளி...

தள்ளித் தள்ளித் தள்ளி...

கடந்த ஜூலை மாதமே இந்தப் படம் வெளியாகும் என்று கூறினர். ஜூலை செப்டம்பரானது... அக்டோபரில் என்றார்கள், தீபாவளிக்கு நிச்சயம் என்றார்கள். கிறிஸ்துமஸுக்கு வருவதாக ஒரு தரப்பு சொன்னது.

பொங்கல் அல்லது ஜனவரி 26-ம் தேதி நிச்சய ரிலீஸ் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. பின்னர் பிப்ரவரி 26-க்கு தள்ளிப் போனது. கடைசியாக மே 9 அல்லது கடைசி வாரம் ரிலீஸ் என்றார்கள்.

ஒரே ஒரு ஸ்டில்லு..

ஒரே ஒரு ஸ்டில்லு..

என்ன சோதனை என்றால், இதுவரை படத்தின் இசை கூட வெளியிடப்படவில்லை. அட படத்துக்கே, ஒரே ஒரு டிசைனைத்தான் இதுவரை வெளியிட்டிருக்கிறார்கள். வேறு புகைப்படங்களே வெளியாகவில்லை.

படம் முடிந்துவிட்டது என்று சிலர் சொன்னாலும், உண்மை நிலவரம்.. இன்னும் பத்து சதவீத படம் பாக்கியுள்ளதாம். இந்திப் பதிப்புக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை என்கிறார்கள்.

மீண்டும் டிடிஎச்...

மீண்டும் டிடிஎச்...

இதெல்லாம் கூட கமல் நினைத்தால் ஒரு மாதத்துக்குள் முடிந்துவிடக்கூடிய பிரச்சினைதான். ஆனால் முக்கிய தடங்கலாக இருப்பது, அமெரிக்காவில் படத்தை டிடிஎச்சில் வெளியிட கமல் எடுத்திருக்கும் உறுதியான முடிவுதானாம். இதற்கு ஒரு சிலர் ஓகே சொன்னாலும், முக்கியமான வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒருசேர எதிர்க்கிறார்கள்.

கமல் கணக்கு

கமல் கணக்கு

ஆஸ்கர் ரவிச்சந்திரன்தான் படத்தின் தயாரிப்பாளர் என்றாலும், கோ புரொட்யூசர் என்ற வகையில் கமலின் முடிவை அவரால் மீற முடியவில்லை. வெளிநாட்டு உரிமை எனப்படும் எப்எம்எஸ் தொகையாக விஸ்வரூபத்துக்கு ரூ 14 கோடி வரை கிடைத்ததாம். விஸ்வரூபம் 2-க்கு இதைவிட அதிகமாக எதிர்ப்பார்க்கிறார்கள். டிடிஎச்சில் வெளியிட்டால் இதனை வசூலிப்பது சுலபம் என்பது கமல் கணக்கு.

தனித் தனியா

தனித் தனியா

இன்னொன்று, விஸ்வரூபம் 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை மொத்தமாக விற்காமல், ஏரியா வாரியாக விற்கலாம் என்பது கமல் முடிவு. ஏற்கெனவே இப்படிச் செய்தவர்தான் கமல். அதாவது அமெரிக்காவில் மட்டும் டிடிஎச்சில் போட்டுவிட்டு, மற்ற நாடுகளுக்கான உரிமையை விநியோகஸ்தர்களுக்கு தரலாம் என்கிறாராம்.

அப்ப கேட்ட தொகை கொடுங்க

அப்ப கேட்ட தொகை கொடுங்க

இதை நிச்சயம் ஏற்க முடியாது என்கிறார்கள் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள். அப்படியெனில் கமல் எதிர்ப்பார்க்கும் தொகையைக் கொடுத்தால், அமெரிக்க உரிமையையும் சேர்த்துத் தருவாரா என்றால்... அது யோசிக்கக் கூடிய விஷயம் என்று பதில் வந்ததால் கமல் தரப்பிலிருந்து!

உத்தம வில்லன் வந்துடும் போலிருக்கே...

உத்தம வில்லன் வந்துடும் போலிருக்கே...

இந்த விநியோக பிரச்சினை, நிதிப் பிரச்சினை, டிடிஎச் விவகாரம் எல்லாம் முடிந்து, விஸ்வரூபம் 2 வெளிவர ஆகஸ்ட் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார் சென்னை விநியோகஸ்தர் ஒருவர்.

ஆனால் செப்டம்பர் 10-ம் தேதி கமல் நடித்து வரும் உத்தம வில்லன் படம் வெளியாகும் என லிங்குசாமி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X