twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    50 நாட்களைத் தொட்டது கமலின் விஸ்வரூபம்!

    By Shankar
    |

    கமல் ஹாஸன் தயாரித்து, இயக்கி, நடித்த விஸ்வரூபம் படம் 50 நாட்களைத் தொட்டுவிட்டது.

    கமல் ஹாஸன், பூஜா குமார், ஆன்ட்ரியா, நாசர் உள்பட பலரும் நடித்த படம் விஸ்வரூபம். தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வேறு எந்தப் படமும் சந்திக்காத, ஏற்படுத்தாத சர்ச்சகளுக்கு காரணமாக அமைந்த படம் இது.

    ஓராண்டு கால காத்திருப்பு...

    ஓராண்டு கால காத்திருப்பு...

    மன்மதன் அம்பு படத்தின் தோல்விக்குப் பிறகு, விஸ்வரூபத்தை கையிலெடுத்தார் கமல். தயாரிப்பின் போதே பிரச்சினைதான். இதன் ஒரிஜினல் தயாரிப்பாளர்கள் பிவிபி சினிமாஸ், பாதியில் விலகினார்கள். தயாரிப்பை கமலே ஏற்றார்.

    டிடிஎச் விவகாரம்

    டிடிஎச் விவகாரம்

    படத்தை கடந்த மே மாதம் முடித்துவிட்டாலும், விற்பனை மற்றும் படத்தின் நீளம் காரணமாக தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. நீளத்தைக் குறைக்க விஸ்வரூபம் 2-ம் பாகத்தை வெளியிட முடிவு செய்த கமல், போட்ட பட்ஜெட்டை வசூலிக்க டிடிஎச் ஒளிபரப்பு எனும் முயற்சியை அறிவித்தார்.

    தியேட்டர்காரர்கள் பிரச்சினை

    தியேட்டர்காரர்கள் பிரச்சினை

    இது எதிர்ப்பார்த்த மாதிரியே பெரும் சலசலப்பைக் கிளப்பியது. டிடிஎச்சில் ஒளிபரப்பக் கூடாது என தியேட்டர்காரர்களும், ஒளிபரப்பியே தீருவேன், இது என் பொருள், என் சந்தை என கமலும் மல்லுக் கட்டினார்கள். ஒருவழியாக படத்துக்கு 400 தியேட்டர்கள் தருவதாக திரையரங்க உரிமையாளர்கள் வாக்களிக்க, கமலும் டிடிஎச் முடிவை மெல்ல மெல்ல கைவிட்டார்.

    அரசு தடை

    அரசு தடை

    ஆனால் இந்தப் படத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்த முஸ்லிம்கள், படத்தை வெளியிடும் முன் போட்டுக்காட்டக் கோரினர். பார்த்த பிறகு, படம் முற்று முழுதாக முஸ்லிம்களுக்கு எதிரானது. வெளியிட்டால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தனர். படவெளியீட்டு இரு தினங்கள் இருந்த நிலையில், உடனடியாக படத்தை 15 நாட்களுக்கு தடை செய்வதாக அறிவித்தது தமிழக அரசு.

    இந்தியில்..

    இந்தியில்..

    இந்தியில் விஸ்வரூப் எனும் தலைப்பில் வெளியான இந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. இரண்டு வாரங்கள் கூட அங்கே தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்தியில் மொத்தம் ரூ 11 கோடி வரை வசூலித்தாகக் கூறப்படுகிறது.

    பரபரத்த தமிழகம்

    பரபரத்த தமிழகம்

    இந்தத் தடை காரணமாக கமலுக்கு ஆதரவு பெருகியது. அவரும் தமிழக அரசு உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் போனார். இதற்கிடையே தமிழகம் தவிர்த்த மற்ற பகுதிகளில் படம்வெளியானது. தமிழகத்திலிருந்து போய் அந்தப் படத்தைப் பார்த்தனர் ரசிகர்கள். வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு.

    தமிழகத்தில் ரிலீஸ்

    தமிழகத்தில் ரிலீஸ்

    தமிழகத்தில் ஒருவழியாக தடைகள் விலகி, கடந்த பிப்ரவரி 7-ம் தேதி படம் வெளியானது. இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. போட்ட பணத்தை எடுத்துவிட்டதாக கமலும் அறிவித்துவிட்டார்.

    50வது நாள்

    50வது நாள்

    இப்போது விஸ்வரூபம் சென்னை, மதுரை உள்ளிட்ட சில நகரங்களில் மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றோடு படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிறது. சென்னையில் மட்டும் 6 அரங்குகளில் படம் ஓடிக் கொண்டுள்ளது. புறநகர் மால்களிலும் விஸ்வரூபம் இன்னும் ஓடிக் கொண்டுள்ளதாக விளம்பரம் சொல்கிறது. ஆனால் பூந்தமல்லி போன்ற பகுதிகளில் படம் எடுக்கப்பட்டுவிட்டது.

    100வது நாளைத் தொடுமா?

    100வது நாளைத் தொடுமா?

    சென்னையில் ஒரு சில அரங்குகளிலாவது இந்தப் படம் நூறாவது நாளைத் தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    English summary
    Kamal Hassan's Viswaroopam has reached its 50 th day today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X