Kamal Salary: அப்போ அது உண்மையா..? கால்ஷீட் 20 நாள் தான்... கமல் சம்பளம் 150 கோடி கன்ஃபார்மாம்!!
சென்னை: பிரபாஸ், கமல் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜக்ட் கே.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான் ஆகியோரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ப்ராஜக்ட் கே படத்தின் டைட்டில் கல்கி 2898 கி.பி என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இந்நிலையில், இந்தப் படத்திற்காக 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ள கமல், 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
கமல் சம்பளம் 150 கோடி கன்ஃபார்ம்: பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தப் படத்துக்கு கல்கி 2898 ஏடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸுடன் உலக நாயகன் கமல்ஹாசனும் நடித்து வருகிறார். இவர்களுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
விக்ரம் படத்தின் வெறித்தனமான ஹிட்டால் கமலின் மார்க்கெட் வேல்யூ மீண்டு உச்சம் தொட்டுள்ளது. கடந்தாண்டு தமிழில் வெளியான படங்களில் விக்ரம் தான் இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்தது. சினிமாவில் பல புதிய முயற்சிகளில் ஈடுபடும் கமல், தான் இப்போதும் மாஸ் ஹீரோ தான் என அடித்து துவம்சம் செய்யும் படமாக விக்ரம் அமைந்தது. இந்தப் படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் பேனர் மூலம் சொந்தமாகவே தயாரித்தார் கமல்.
250 முதல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான விக்ரம், சுமார் 700 கோடி வரை வசூலித்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை ஆகியவையும் பல கோடிகளை கமலுக்கு வாரி கொடுத்தது. இதன்படி விக்ரம் படத்திற்காக கமல் சம்பளம் மட்டும் 150 கோடி ரூபாய் என அவர் ஃபிக்ஸ் செய்து கொண்டாராம். இதுவே தற்போது கமலின் மார்க்கெட் வேல்யூவை உச்சம் கொண்டு சென்றுள்ளது.
அதாவது ப்ராஜக்ட் கே என்ற கல்கி படத்தில் நடிக்கும் கமல், இதற்கும் 150 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக இந்தப் படத்திற்கு மொத்தமே 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம் கமல். அதேபோல், ப்ராஜக்ட் கே படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். அதனால், கால்ஷீட் குறைவாக கொடுத்தாலும் சம்பளத்தில் மாற்றம் இல்லை என தெளிவாக கூறிவிட்டாராம். விக்ரம் படத்திற்குப் பின்னர் கமலுக்கு ரசிகர்களிடம் அதிக கிரேஸ் கூடியுள்ளது.
இதனால், அவரது கால்ஷீட் கிடைத்தாலே போதும் என, கமல் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்புத் தரப்பு ஓக்கே சொல்லிவிட்டதாம். கல்கியில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பது பெரிய ஹைப் கொடுத்துள்ளது. அதேபோல், முதல் பாகத்தை விடவும் கல்கி 2ல் தான் கமலின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சும்மாவே நடிப்பில் மிரட்டும் உலகநாயகன் இந்தப் படத்தில் வில்லத்தனத்தில் மாஸ் காட்டுவார் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











