மோடியின் சுத்தமான இந்தியா சவாலை ஏற்ற கமல், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா
சென்னை/மும்பை: பிரதமர் மோடி விடுத்த சுத்தமான இந்தியா சவாலை நடிகர் கமல் ஹாஸன், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஏற்றுள்னர்.
காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி பிரதமர் மோடி சுத்தமான இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் தானே கையில் துடைப்பத்தை எடுத்து சுத்தமும் செய்தார்.
மக்கள் ஆண்டில் 100 மணிநேரத்தை சுத்தம் செய்ய ஒதுக்கினால் இந்தியா சுத்தமான நாடாகிவிடும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

சவால்
மோடி உலக நாயகன் கமல் ஹாஸன், பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு சுத்தமான இந்தியா சவால் விடுத்தார்.

கமல்
பிரதமர் மோடி விடுத்த சவாலை ஏற்பதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

சல்மான் கான்
சல்மான் கான் மோடியின் சவாலை ஏற்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நானும், எனது ஃபவுன்டேஷனும் மதிப்பிற்குரிய பிரதமரின் சுத்தமான இந்தியா சவாலை ஏற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா
பிரதமர் நரேந்திர மோடிஜியின் சவாலை நான் ஏற்கிறேன் என்று பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications