அர்ச்சனாவாக மாறிய ஆரி.. பாலாஜி நீ என் தம்பி டா.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா.. முடியல!
சென்னை: பாலாஜி முருகதாஸை திருத்தி நல்வழிப்படுத்தி விட்டுத் தான் ஆரி இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என தெரிகிறது.
சுரேஷ் சக்கரவர்த்தி தான் இன்னைக்கு வெளியேறுகிறார் என்பது அனைவருக்கும் இரு தினங்களுக்கு முன்பாகவே தெரிந்து விட்டது.
அதன் பின்னரும், கமல் சார் பாவம் சஸ்பென்ஸ் எல்லாம் கொடுத்து மற்ற போட்டியாளர்களை சேவ் பண்ணதை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.

ஏன் கசிகிறது
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் எலிமினேட் ஆவது குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் கசிவதற்கு முக்கிய காரணமே, அந்த நிகழ்ச்சி லைவ் இல்லை என்பது தான். இந்த பிரச்சனை எல்லா ரியாலிட்டி ஷோக்களுக்கும் டெக்னாலாஜி வளர்ச்சியால் நடைபெறுவது வழக்கம். என்றாலும் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாமே அம்பலமாவது நிகழ்ச்சி நடத்துபவர்கள் மத்தியில் இருக்கும் செக்யூரிட்டி பிரச்சனை தான்.

இன்னும் வெளியே போகல
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வாரம் யாரும் வெளியே போக மாட்டார்கள் என்று நினைத்த சில ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக சுரேஷ் சக்கரவர்த்தியின் வெளியேற்றம் இருந்தது. அதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டில் ஆரி, பாலா, சனம் ஷெட்டி, அனிதா, அர்ச்சனா உள்ளிட்டோர் சேவ் ஆனார்கள்.

அழுத ஆரி
ஆரி நீங்க சேவ் என கமல் சொன்னதும், நடிகர் ஆரி அர்ஜுனாவுக்கு அழுகையே வந்து விட்டது. அழுது கேப்டன் பதவியை நீங்க வாங்குனீங்க என பாலாவும் சம்யுக்தாவும் போட்ட கேவலமான சண்டைக்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்தே வெளியேறலாம் என்கிற முடிவுக்கே ஆரி வந்து விட்டார். அதன் காரணமாக சேவ் என்பதை கேட்டதும் அழத் தொடங்கி விட்டார்.

அர்ச்சனாவாக மாறிய ஆரி
பாலாஜி முருகதாஸ் கூட யாரெல்லாம் சண்டை போடுறாங்களோ கடைசியா அவங்க அவரை பிள்ளையாகவும், தம்பியாகவும் தத்தெடுத்துக் கொள்வது என்ன ஸ்ட்ராட்டர்ஜி என்று தான் சுத்தமா புரியவில்லை. சனிக்கிழமை நிகழ்ச்சிக்குப் பிறகு, நாற்காலியை எல்லாம் உடைத்து விட்டு, ஆரியுடன் அந்த சண்டை போட்ட பாலாஜியை பார்த்து, உன்னை எனக்கு புடிக்கும்டா, நீ என் தம்பி டா என ஆரி சொன்னதை கேட்டதும் ரசிகர்களுக்கு இது அது இல்லை என அர்ச்சனா சீனை நினைவுக் கூர்ந்தனர்.

திருத்தாம போகமாட்டார் போல
பாலாஜி முருகதாஸை எப்படியாவது திருத்தி விட்டுத் தான் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேறுவேன் என்கிற ரேஞ்சுக்கு ஆரி கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது என்ன லாஜிக் என்று தான் தெரியவில்லை. உங்க நேர்மையை வைத்துக் கொண்டு உங்க கேமை ஆடுங்க புரோ, யாரையும் திருத்த தேவையில்லை.

ஏமாற்றிய விஜய் டிவி
இந்த வாரம் பாலாஜி முருகதாஸுக்கு ரெட் கார்டு கொடுப்பாங்கன்னு ஏகப்பட்ட பிரபலங்கள் சமூக வலைதளத்தில் கூவினார்கள். எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனால், கமலும் விஜய் டிவியும் அதை அப்படியே மூடி மறைத்து விட்டு தங்களின் டி.ஆர்.பி கேமை தொடர்ந்து விளையாட தொடங்கி விட்டனர். சனம்க்கே பிரச்சனை இல்லை. உங்களுக்கு என்ன?


Click it and Unblock the Notifications











