முதல் நாளில் முதல் நபராய் கலக்கலாய் சேவ்வான ஆரி.. காண்டான பாலாஜி.. கவலைப்பட்ட கேபி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நபராய் ஆரி காப்பாற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுச்சி, சம்யுக்தா என 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காப்பாற்றப்படும் போட்டியாளர்கள்
இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஷிவானி, ஆஜித், ஆரி, ரம்யா பாண்டியன், சனம், நிஷா, அனிதா ஆகியோர் நாமினேஷனில் இடம் பிடித்தனர். இதில் முதல் நாளான சனிக்கிழமை ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல், காப்பாற்றப்படும் 2 போட்டியாளர்கள் குறித்து அறிவிப்பார்.

ஆக்டிவிட்டி ஏரியா
அதன்படி நேற்றைய எபிசோடில் இந்த வார எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட 2 பேர் குறித்து அறிவித்தார் கமல். இதற்காக நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்த ஹவுஸ்மேட்ஸை கால் டாஸ்க் நடைபெற்ற ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு அனுப்பினார் கமல்.

முதல் நபராய் ஆரி
தொடர்ந்து போட்டியாளர்கள் அங்கு அமர்ந்திருக்க, யார் மீது வெள்ளை நிற லைட் வெளிச்சம் படுகிறதோ அவர்கள்தான் சேவானவர்கள் என்று கூறினார் கமல். அதன்படி முதல் நபராய் ஆரி காப்பாற்றப்பட்டார்.

கவலைப்பட்ட கேபி
அவரை தொடர்ந்து இரண்டாவது நபராய் ரம்யா பாண்டியன் காப்பாற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அவர்களுக்கு சக ஹவுஸ்மேட்ஸ் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கார்டன் ஏரியாவில் ஆஜித் மற்றும் சோமிடம் பேசிய கேபி, ரம்யா என்ன செய்தார் என அவர் காப்பாற்றப்பட்டார்.

வருத்தப்பட்ட கேபி
அவரைவிட சனம் ஷெட்டி நன்றாக தானே எல்லா டாஸ்க்கையும் செய்கிறார். அவரை இன்னும் சேவ் பண்ணாமல் இருக்கிறீர்களே என்று கூறி ரொம்பவே வருத்தப்பட்டார். அதனைக்கேட்ட ஆஜித், ரம்யாவுக்கு ஆதரவாக பேசினார்.
Recommended Video

உறுதியான தகவல்
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சனம் ஷெட்டிதான் வெளியேறுகிறார் என்று நேற்று தகவல் வெளியானது. இன்றைக்கான எபிசோடு நேற்றே காட்சியாக்கப்பட்ட நிலையில் சனம் ஷெட்டி வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











