கெஞ்சிய நிஷா.. கண்ணீர்விட்ட அர்ச்சனா.. செம கலாய் கலாய்த்த கமல்.. அதகளப்படுத்தும் அடுத்த புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பேசிய கமல், யார் இந்த வாரம் சேவ் ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார்.
அதற்கு பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் சனம் ஷெட்டிதான் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

ஜென்ரல் செக்கப்
இதில் பேசும் கமல், சில பேர் ஹெல்த் செக்கப்புக்கு போனீங்களே என்று கேட்கிறார். அதாவது பிக்பாஸ் வீட்டில் 60 நாட்கள் பங்களிப்பு என்ன என ஹவுஸ்மேட்டுகளிடம் கேட்டதை ரகசியமாக வைக்க சொன்னார் பிக்பாஸ். அதனை ஆஜித் ஜென்ரல் செக்கப் என்று கூறினார்.

இரண்டாவது புரமோ
உடனே பிளட் டெஸ்ட பண்றாங்களா என கேட்டு மிரண்டனர் ஹவுஸ்மேட்ஸ். தொடர்ந்து ஒவ்வொரு ஹவுஸ்மெட்டாய் அழைத்து என்ன செஞ்சீங்க என கேட்டு டேமேஜ் பண்ணினார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கமல் அதைப்பற்றி பேசுவது இரண்டாவது புரமோவில் தெரியவந்துள்ளது.

ஹெவி ஆயிடுச்சு
சில பேர் ஹெல்த் செக்கப்புக்கு போனீங்க இல்லையா? என்று கேட்கவும் வீடு முழுக்க சிரிப்பலை எழுகிறது. தொடர்ந்து பேசும் அர்ச்சனா, பர்ஃபாமன்ஸ் ரொம்ப ஹெவி ஆயிடுச்சு சார். அதுலதான் எங்களுக்கு டவுட் வந்துடுச்சு என்கிறார்.

கமலிடம் கெஞ்சிய நிஷா
தொடர்ந்து பேசும் நிஷா, அந்த ரகசியத்த நாங்க ரொம்ப அழகா பாதுகாத்துருக்கோம். தயவு செஞ்சு ஒரு பாராட்டு கொடுத்துடுங்க சார் ப்ளீஸ் சார் என கெஞ்சுகிறார். இதனைக் கேட்ட கமல், நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன் கூறி நிஷா சேவ்டு என்கிறார். இதனைக் கேட்டு ஷாக்காகிறார் நிஷா.

தொலைச்சிட்டோமோன்னு பயம்
ஆனால் அர்ச்சனாவோ கண்ணீர் விடுகிறார். அதனை பார்த்த கமல் இதுல அர்ச்சனாவுக்கு உங்கள விட ரொம்ப சந்தோஷம் போல என கேட்க, ஆமாம் சார், நிஷாவ நாங்க தொலைச்சிட்டோமோன்னு ஒரு பயமே இருந்துச்சு சார். திருப்பியும் நிஷா எங்களுக்கு கிடைச்சிட்டா என்கிறார்.

நாங்களும் தேடிட்டு இருக்கோம்
இதனைக் கேட்ட கமல் நீங்களும் தேடிட்டு இருந்தீங்களா.. வெளியே இருந்தே நாங்க தேடிட்டு இருக்கோம் என நிஷாவை மரண கலாய் கலாய்க்கிறார். இதனால் வீடே சிரித்து மகிழ்ந்துள்ளது. இப்படியாக உள்ளது இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ.


Click it and Unblock the Notifications











