ஒன்றரை மணி நேரத்தில் 3 மணி நேரத்தை கணித்த விவகாரம்..கேம்ம கெடுக்காதீங்க. பாலாஜிக்கு கமல் சவுக்கடி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் பாலாஜியை விளாசியுள்ளார் கமல்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் பேசிய நடிகர் கமல் ஹாசன், டாஸ்க்கின் போது தூங்கிய பாலாஜியை குத்துவது போல் பேசினார்.
இதனால் இன்றைய நிகழ்ச்சியில் நிச்சயம் பாலாஜியை வச்சு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பாலாஜி என்ன சிரிப்பு?
இதில் பேசும் கமல், பாலாஜி, ரம்யா சுச்சி என பெயரை குறிப்பிடுகிறார். தொடர்ந்து என்ன பாலாஜி சிரிக்கிறீங்க என்ற அவர், ஒரு மணிநேரம் 26 நிமிடங்களில் 3 மணி நேரத்தை நீங்கள் கழித்துள்ளீர்கள் என கூறுகிறார்.

கேம்மோட ஸ்பிரீட்ட கெடுக்காம..
மேலும் இந்த ரூல்ஸ பிரேக் பண்ணாம இருந்தீங்கன்னா.. என்று கூறும் கமல் கேம்மோட ஸ்பிரீட்ட கெடுக்காம இருந்தால் அது உங்க டீம் மெட்ஸும் சந்தோஷமாக இருப்பார்கள் நீங்கள் முன்னேறவும் அது ஒரு வாய்ப்பாக கூடும் என கூறுகிறார்.

பொறுப்பில்லா விளையாட்டு
கமல் பேச பேச அமைதியாக கேட்கிறார் பாலாஜி. மணிக்கூண்டு டாஸ்க்கின் போது, நாம் செட் பண்றதுதான் டைம் என்று கூறி ஒன்றரை மணி நேரத்தில் 3 மணி நேரத்தை கணித்தார். அவரது இந்த பொறுப்பில்லாத விளையாட்டு ஹவுஸ்மெட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.

மிரட்டிய பாலாஜி
மேலும் டாஸ்க் செய்ய எழுந்து வராமல் குப்புற படுத்து தூங்கினார் பாலாஜி. ஹவுஸ்மெட்ஸ் எழுப்பிய போதும் அசராத பாலாஜி, இப்படி தொல்லை செய்தால் போகவே மாட்டேன் என மிரட்டினார். பாலாஜி மிரட்டியதை பார்த்த ஹவுஸ்மெட்ஸ் இந்த வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் மண்ணை அள்ளி போட போகிறார் என மிரண்டனர்.

பாலாஜிக்கு சவுக்கடி
இந்நிலையில் அந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள கமல், பாலாஜி ஒருவரால் மொத்த டீமும் பாதிக்கப்படுவதாக கூறி விளாசியுள்ளார். மேலும் அடிக்கடி ரூல்ஸை பிரேக் பண்ணுவதாகவும் தெரிவித்து சவுக்கடி கொடுத்துள்ளார் கமல்.


Click it and Unblock the Notifications











