குரூப்பிஸம் இருக்கு.. வார்த்தை ஜாலம் செய்யும் கமல்.. ரெண்டு பேருக்கு ஆப்பு.. அதிரடி புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கிறார். அதன்படி இன்று வெளியான முதல் புரமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி ஹீரோவாகவே மாறிவிடுவார் போல என புகழ்ந்தார் கமல்.
அதனை பார்த்த ரசிகர்கள், அதெல்லாம் சரிதான், அவரின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் நடந்து கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்களை கொஞ்சம் கண்டியுங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

சேர சோழ பாண்டியர்கள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கமல் பேசியிருப்பதாவது, ஆளாளுக்கு ஒரு குரூப்ப சேர்த்துக்கிட்டு ஒரு குரூப்பிஸம் ஃபார்மாயிட்டு இருக்கு..இந்த 16, 17 சேர, சோழ பாண்டியர்கள்னு பிரிச்சோம்ன்னா.. ரேகாவையும் சனமையும் பாண்டியர்கள்தான்னு சொல்லனும்.

அங்கேயும் டூ மீன்
ஏன்னா மீன் கொடிய அப்படி தூக்கிப்பிடிக்கிறாங்க.. பாண்டியன் கொடியில டூ மீன்... அங்கேயும் டூ மீன்.. நான் என்ன மீன் பண்றேன்னு உங்களுக்கு புரியும்.. என முடிக்கிறார். டூ மீன் என்றால் ரொம்ப ரூடாக இருப்பது என்ற அர்த்தம் உள்ள நிலையில் கமல் மீன் மீன் என வார்த்தையில் விளையாடியிருக்கிறார்.

சோஃபாவை உடைத்த ரியோ
எவிக்ஷன் ஃபிரி டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக கூறினார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் குரூப்பிஸம் இல்லவே இல்லை என்று அடித்து கூறினார் ரியோ ராஜ். எப்படி குரூப்பிஸம் இருக்கு என்று சொல்லலாம் என சண்டை போட்டு சோஃபாவையெல்லம் அடித்தார்.

கொஞ்சம் கேளுங்கள்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருக்கு என்பதை கமலே ஒத்துக்கொண்டார். கமலின் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருக்கு என்பதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள் அதுகுறித்து கொஞ்சம் ஹவுஸ் மேட்ஸ்களிடம் பேசுங்கள் என்று கூறியிருக்கின்றனர்.

குறும்படம் இருக்குமா?
மேலும் ரேகாவையும் சனம் ஷெட்டியையும் மட்டும் கமல் குறிப்பிட்டு பேசுவதால் அவர்களை காய்ச்சி எடுக்க போகிறார் என்றும் தெரிந்துள்ளது. இதனிடையே இன்று யாருக்காவது ஏதாவது குறும்படம் இருக்குமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











