இதெல்லாம் சின்னபிள்ளைத்தனமா இருக்கு.. ஹவுஸ்மேட்ஸால் கடுப்பான கமல்.. எதுக்குன்னு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் செய்த காரியத்தால் கடுப்பாகியுள்ளார் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் பாலாஜி காப்பாற்றப்பட்டதாக கூறினார் கமல்.

இதனைக் கேட்ட பாலாஜி சந்தோஷத்தில் கதறி அழுதார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இருவர் முன்னேற போகிறார்கள்

இருவர் முன்னேற போகிறார்கள்

இதில் மூன்று பெண் போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற போவதாக கூறுகிறார். அதாவது மூன்று மகளிர்களில் இருவர் அடுத்த வாரத்துக்கு முன்னேற போகிறீர்கள் என்று கூறுகிறார் கமல்.

வாயை திறக்கவில்லை

வாயை திறக்கவில்லை

தொடர்ந்து பேசும் கமல், ஆண்களிடம் கேட்போம், இந்த மூவரில் யார் சேவ் ஆகப் போகிறாங்கன்னு நினைக்கிறீங்க என்கிறார். அதற்கு யாருமே வாயை திறக்காமல் அமைதியாய் அமர்ந்துள்ளனர்.

கீழே பார்த்தால்..

கீழே பார்த்தால்..

இதனை பார்த்த கமல், நான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்ற மாதிரி தெரியல என்கிறார். அப்போது ரியோ கீழே பார்த்ததை கவனித்த கமல், கீழே பார்த்தால் கேட்க மாட்டேனா என்கிறார்.

சிறுபிள்ளைத்தனமா இருக்கு

சிறுபிள்ளைத்தனமா இருக்கு

மேலும், சொல்ல மாட்டீங்களா என்று மீண்டும் கேட்கும் கமல், சரி போங்க.. இதெல்லாம் ரொம்ப சிறுபிள்ளைத்தனமா இருக்கு.. டக்குன்னு சொல்லி முடிக்க வேண்டியது என்று எவிக்ஷன் கார்டை எடுக்கிறார்.

எங்களுக்கு தெரியும் ஆண்டவரே

எங்களுக்கு தெரியும் ஆண்டவரே

இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது ப்ரோமோ. பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி நாராயணன் வெளியேறிய தகவல் நேற்றே கசிந்தது. இந்நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ஷிவானி எவிக்ட்டானது எங்களுக்கு தெரியும் ஆண்டவரே என கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X