Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கலாம்.. கமல்ஹாசன் வெளியிட்ட அடுத்த ப்ரமோ!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிரப்பாக உள்ளது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் பல சர்ச்சைக்குரிய பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் துவக்கவிழா அக்டோபர் 9ம் தேதி மாலை 6 மணியளவில் பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது.
விஷால்
வீட்டில்
கல்வீச்சு..பிடிபட்ட
4
பேர்
சொன்ன
பேய்க்கதை..வயிறு
வலிக்க
சிரித்த
போலீஸார்

பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. கடந்த 5வது சீசனில் ராஜு டைட்டிலை வெற்றிக் கொண்டார். அடுத்த இடத்தை பிரியங்கா தேஷ்பாண்டே பெற்றார். கமல்ஹாசனின் சிறப்பான தொகுப்பில் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட்
இந்த நிகழ்ச்சியின் வெற்றியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் இடையிலேயே விலகிய நிலையில், நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினார். ஆனாலும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை அதிகமாக கவர தவறிவிட்டது.

அக்டோபர் 9ல் துவக்கம்
இதனிடையே வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் துவக்கவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. தினந்தோறும் இரவு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

போட்டியாளர்களை அறிவிக்காத விஜய் டிவி
இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது விஜய் டிவி. ஆனாலும் தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியானவண்ணம் உள்ளன.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சி
இதனிடையே இன்றைய தினம் வெளியாகியுள்ள ப்ரமோவில், 24 மணிநேரமும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை விஜய் டிவியிலும் தொடர்ந்து 24 மணிநேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் நிக்காம பார்க்கலாம் என்று அவர் அறிவித்துள்ளார். மிகவும் சிறப்பான வகையில் இந்தப் ப்ரமோ காணப்படுகிறது.

பொதுமக்களும் பங்கேற்பு
ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் தூண்டியுள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பல்வேறு காரணங்களால் தாமதமாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் போட்டியாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் ஒரு வாரத்தில் நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இந்த சீசனில் பொதுமக்களும் பங்கேற்கவுள்ளது குறிப்பத்தககது.