முகமூடியெல்லாம் அவிழ ஆரம்பிச்சுருச்சு.. யாரை குறி வைக்கிறார் கமல்.. தெறிக்கவிடும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் பங்கேற்கும் எபிசோடின் முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார்.
வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகள், நல்லது கெட்டது, சண்டை சச்சரவுகள் குறித்து விவாதிக்கிறார். தவறை சுட்டிக்காட்டுவதையும் நல்லதை பாராட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

காலையில் இருந்து காத்திருப்பு
இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல் பங்கேற்கும் புரமோவுக்காக காலை முதலே காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் பகல் 2 மணிக்கு தான் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்பாடா ஒரு வழியா வந்துட்டீங்க என நிம்மதியடைந்துள்ளனர்.

வில்லனோட அடி ஆள்
புரமோவில் மாஸ்க் மற்றும் சன்கிளாஸை கழற்றும் கமல்ஹாசன், உள்ளேயும் முகமூடிகள் அவிழ ஆரம்பிச்சுருச்சு. பார்க்க பெரிய வில்லனோட அடி ஆள் மாதிரி இருக்காரே.. பேச்சும் ஒரு மாதிரி இருக்கே.. நல்லவரா அப்படின்னு சந்தேகப்பட்டோம்.

ஹீரோவாவே மாறிடுவாரு போல
ஆனா நிஜ முகம் தெரிய ஆரம்பிச்சதும்.. நல்லவர்தான்னு தோனுது.. ஹீரோவாவே மாறிடுவாரு போலருக்கு.. அப்போ நாம நல்லவங்கன்னு நினைச்சுட்டு இருக்கவங்கள்லாம்.. என கேள்விக்குறியோடு கேட்கும் கமல், பாப்போம் என அவரது ஸ்டைலில் சொல்லி முடிக்கிறார்.
Recommended Video

புரிந்தாலே போதும்
கமல் குறிப்பிட்டு சொல்வது சுரேஷ் சக்கரவர்த்தியைதான் என்ற தெள்ள தெளிவாக தெரிகிறது. ஆக கமலுக்கு புரிகிறது சுரேஷ் சக்கரவர்த்தி நல்லவர்தான் என்று. இதனை பார்த்த ரசிகர்கள், நல்லவர் யார் என உங்களுக்கு புரிந்தாலே போதும் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











