இன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருக்கிறது.. இன்று இரவு.. சஸ்பென்ஸ் வைக்கும் கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி வெளியேறினார்.
6 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்டுகளாக இருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மற்றொரு போட்டியாளரான கேபி 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

முதல் புரமோ
இதனை தொடர்ந்து ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா என 5 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

வெல்லப் போவது யார்?
இதில் வழக்கம் போல் கோட் சூட்டில் டக்கராய் வந்துள்ளார் கமல். இதில் பேசும் அவர் அறுவரில் ஒருவர் பணத்துடன் வெளியேறிவிட்டார். எஞ்சிய ஐவரில் வெல்லப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் உங்கள் ஓட்டுக்கள் வந்து சேர்ந்துவிட்டன.

இன்னும் ஒரு திருப்பம்
இந்த 100 நாட்களில் எதிர்பாராத பல திருப்பங்களை நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருக்கிறது. இன்று இரவு.. என தனக்கே உரிய பாணியில் முடித்துள்ளார் கமல். இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் ஒரு திருப்பமா? என அதிர்ச்சியாகியுள்ளனர்.

யூகிக்கும் ஃபேன்ஸ்
அப்படி என்றால் இன்று இரவு யாரையாவது வெளியே அனுப்ப போகிறார்களா என்று கேட்டு வருகின்றனர். அப்படி ஒருவர் வெளியே அனுப்பப்பட்டால் அந்த நபர் யாராக இருக்கும் என்றும் சோம் அல்லது ரம்யா ஆகிய இருவரில் ஒருவராக இருக்கலாம் என்றும் யூகித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











