இறுதி போட்டிக்கு இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது.. மீண்டும் டபுள் எவிக்ஷனா? திகில் கிளப்பும் கமல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

அப்படி ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல், வாரம் முழுக்க நடக்கும் சம்பவங்கள் குறித்து விசாரித்து யார் யாருக்கு என்னென்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் கொடுப்பார்.

முதல் ப்ரோமோ

முதல் ப்ரோமோ

அந்த வகையில் சனிக்கிழமையான இன்று நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார். இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி வழக்கம்போல் ஜீன்ஸ் அன்ட் கோட் சூட்டில் டக்கராய் வந்துள்ளார் கமல்ஹாசன்.

என்ன தகுதி இருக்கு இவங்களுக்கு?

என்ன தகுதி இருக்கு இவங்களுக்கு?

தொடர்ந்து பேசும் கமல், என்ன செஞ்சுட்டாங்க இவங்க? என்ன தகுதி இருக்கு இவங்களுக்கு இங்கே வர? எதன் அடிப்படையில் இவங்களுக்கு ஓட்டுப்போடுவாங்க? அப்படிங்கிற கேள்வி பலருக்கும் இருப்பதை நான் உணருகிறேன்..

ஒருவர் வெளியேற வேண்டும்

ஒருவர் வெளியேற வேண்டும்

அதற்கான பதிலை வீட்டிற்குள் இருக்குறவங்க சொல்லியிருக்காங்க. இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது. அதற்கு முன்பாகவே ஒருவர் வெளியேற வேண்டும். அது யார்? இன்று இரவு.. என முடித்துள்ளார்.

டபுள் எவிக்ஷனா?

டபுள் எவிக்ஷனா?

இதனை பார்த்த ரசிகர்கள், இன்று இரவே தெரிந்து விடுமா? என்றும் அப்போது இந்த வாரம் டபுள் எவிக்ஷனா என்றும் கேட்டு வருகின்றனர். அடுத்த ஞாயிற்றுக் கிழமை அதாவது 17 ஆம் தேதி பிக்பாஸ் ஃபினாலே நடைபெற உள்ள நிலையில் தற்போது வரை பிக்பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் உள்ளனர்.

பாலாஜியை வெளியேற்ற வேண்டும்

பாலாஜியை வெளியேற்ற வேண்டும்

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரே வாரத்தில் டபுள் எவிக்ஷனாக ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு ஆரியிடம் பாலாஜி நடந்து கொண்ட விதத்தை பார்த்து அவரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பல்வேறு எதிர்பார்ப்பு

பல்வேறு எதிர்பார்ப்பு

இதனால் கடந்த வாரங்களில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்றைய ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X