இந்தியன் 2 விபத்து.. பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு.. கமல், ஷங்கர் வழங்கினர்!

By

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் இழப்பீடு வழங்கினர்.

Recommended Video

Indian 2 விபத்து நடந்த இடத்தில் மீண்டும் படபிடிப்பு? Kamal Hassan Press Meet

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் 'இந்தியன் 2'. சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது.

அறுந்து விழுந்தது

அறுந்து விழுந்தது

கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இரவு சண்டைக் கலைஞர்கள் மற்றும் அரங்கம் அமைப்பவர்கள் பணியில் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ராட்சத கிரேன்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கொண்டிருந்தன. அப்போது திடீரென கிரேன் அறுந்து கீழே விழுந்தது. இதில், ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா (34), ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன் (60), புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது (29) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்தார்கள்.

கொடூரமான விபத்து

கொடூரமான விபத்து

நசரத்பேட்டை போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டரில், இது கொடூரமான விபத்து என்று தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் ரூ.1 கோடி கொடுப்பதாக, தனித்தனியாக அறிவித்து இருந்தனர். லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்திருந்தது.

ஆர்.கே.செல்வமணி

ஆர்.கே.செல்வமணி

ஆனால், யாருக்குமே பணம் கொடுக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததுதான் காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் வைத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கும் இந்த நிவாரணத் தொகை நேற்று வழங்கப்பட்டது. உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கமல், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். 'உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எனது இரங்கல், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என இயக்குநர் சங்கர் கூறியுள்ளார். படப்பிடிப்பு விபத்து கசப்பான பாடம், சட்டதிட்டங்களின்படி நடப்போம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X