twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இந்தியன் 2' ஷூட்டிங் விபத்து.. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கமல்ஹாசன், ஷங்கர் இன்று உதவி!

    By
    |

    சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், லைகா நிறுவனம் இன்று நிதி உதவி வழங்குகின்றனர்.

    Recommended Video

    Bigg Boss 4 இந்த 2020 ல் நடக்குமா? • Kamal Hassan

    கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான படம், 'இந்தியன்'.

    சூப்பர் ஹிட்டான இந்த படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இப்போது இயக்கி வருகிறார்.

    இது தற்செயலாக நடந்ததல்ல.. மந்திரங்கள் ஓதப்பட்டதால் நடந்தது.. சுஷாந்தின் சகோதரி உருக்கம்!இது தற்செயலாக நடந்ததல்ல.. மந்திரங்கள் ஓதப்பட்டதால் நடந்தது.. சுஷாந்தின் சகோதரி உருக்கம்!

    பிப்ரவரி மாதம்

    பிப்ரவரி மாதம்

    சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இரவு சண்டைக் கலைஞர்கள் மற்றும் அரங்கம் அமைப்பவர்கள் பணியில் இருந்தனர்.

    மின் விளக்குகள்

    மின் விளக்குகள்

    இரவு நேரம் என்பதால் ராட்சத கிரேன்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கொண்டிருந்தன. அப்போது திடீரென கிரேன் அறுந்து கீழே விழுந்தது. இதில், கீழே பணியில் இருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது படக்குழுவைச் சேர்ந்த மான்சிங், வாசு, ரம்ஜான், அருண்பிரசாத், குமார், கலைசித்ரா, குணபாலன், திருநாவுக்காரசு, முருகதாஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    மதனின் மருமகன்

    மதனின் மருமகன்

    ஆனால், அங்கு உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன் (60), புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது (29) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, பத்திரிகையாளர் மதனின் மருமகன். நசரத்பேட்டை போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கொடூரமான விபத்து

    கொடூரமான விபத்து

    இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டரில், இது கொடூரமான விபத்து என்று தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் ரூ.1 கோடி கொடுப்பதாக, தனித்தனியாக அறிவித்து இருந்தனர். லைகா நிறுவனமும் உதவித் தொகையை அறிவித்திருந்தது. ஆனால், அதை வழங்கவில்லை. இதற்கிடையே அந்த தொகையை இன்று மாலை வழங்க உள்ளனர்.

    ஆர்.கே.செல்வமணி

    ஆர்.கே.செல்வமணி

    சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் இந்தியன் 2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு காசோலை வழங்கப்படுகிறது. இதில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட நிர்வாகிகளும் சினிமா பிரபலங்களும் லைகா நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

    English summary
    Kamal Haasan, Director shankar, Lyca are going to issue cheques for the families who are affected in Indian 2 film shooting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X