Kamal ShivaRajkumar: தலைவரை தொடர்ந்து உலகநாயகனுடன் கூட்டணியா... சிவராஜ்குமார் கமல் சந்திப்பு ஏன்..?
மும்பை: கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது.
ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள கோஸ்ட் ஆக்ஷன் ஜானரில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் சிவராஜ்குமாருடன் உலகநாயகன் கமல் எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

உலகநாயகனுடன் சூப்பர் ஸ்டார்
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் சிவ ராஜ்குமார். தமிழில் ஒரே நேரத்தில் ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் நடித்த சிவராஜ்குமார், கன்னடத்தில் கோஸ்ட் என்ற படத்திலும் நடித்துள்ளனர். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவராஜ்குமார் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸானது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிவராஜ்குமார்.
நரசிம்ஹா என்ற கேங்ஸ்டராக கெத்து காட்டிய சிவராஜ்குமார், ரஜினியை விடவும் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட் கொடுத்திருந்தார். ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் என்ட்ரி கொடுத்த இரண்டு காட்சிகளுமே தியேட்டரில் ரசிகர்களை தெறிக்கவிட்டது. இதனால் ஒரே படத்தில் கோலிவுட் ரசிகர்களிடமும் சிவராஜ்குமாருக்கு வரவேற்பு காணப்பட்டது. இதனால் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் கேரக்டர் பற்றிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம், வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. விஜய்யின் லியோவுக்குப் போட்டியாக சிவராஜ்குமாரின் கோஸ்ட் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. M. G. ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள கோஸ்ட், ஆக்ஷன் ஜானரில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளதாம். ஏற்கனவே கோஸ்ட் ட்ரெய்லர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது.
கோஸ்ட் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதால், இதன் ப்ரொமோஷன் மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிவராஜ்குமார் கலந்துகொண்டார். அதுமட்டும் இல்லாமல் உலகநாயகன் கமல்ஹாசனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். விக்ரம் படத்தில் கோஸ்ட்டாக நடித்திருந்த கமல், சிவராஜ்குமாரின் கோஸ்ட் புரொமோஷனில் கலந்துகொண்டது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோஸ்ட் புரொமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் சிவராஜ்குமாரும் போட்டோ எடுத்துள்ளனர். அதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள சிவராஜ்குமார், மும்பையில் நடைபெற்ற கோஸ்ட் புரொமோஷனில் கமல்ஹாசனை சந்தித்ததில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். சிவராஜ்குமார் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவரே ஒருமுறை தனது நினைவுகளை பகிர்ந்திருந்தார்.

அதாவது. சிவராஜ்குமார் சினிமாவில் நடிக்கும் முன்பு, அவரது வீட்டிற்கு கமல் சென்றிருந்ததாகவும், அப்போது சிவ ராஜ்குமாரை கமல் கட்டிப்பிடித்ததாகவும் கூறியிருந்தார். மேலும், கமல்ஹாசனை கட்டிப்பிடித்த சந்தோஷத்தில் மூன்று நாட்கள் வரை குளிக்காமல் இருந்தாராம் சிவராஜ்குமார்.


Click it and Unblock the Notifications











