த்ரிஷ்யம் படப்பிடிப்பு நடந்த அதே வீட்டில் பாபநாசம் ஷூட்டிங்!
சென்டிமென்டை கமல் நம்பாதவராக இருந்தாலும், இயக்குநர் ஜீத்து ஜோசப் ஏகத்துக்கும் நம்புவார் போலிருக்கிறது.
மோகன்லால் - மீனாவை வைத்து அவர் இயக்கிய த்ரிஷ்யம் படமாக்கப்பட்ட அதே லொகேஷனில், த்ரியஷ்யத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தையும் ஷூட் செய்கிறார்.
மோகன்லால் வேடத்தில் கமலஹாசனும், மீனா வேடத்தில் கவுதமியும் நடிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து முடிந்தது.

உடல் நிலை பாதிப்பு
நெல்லைத் தமிழ் பேசி இரு மகள்களுக்குத் தந்தையாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை திரும்பினார். தனியார் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றார்.

ஓய்வு
பூரண குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர், இப்போது அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார்.

அக்டோபர் முதல் வாரம்
அக்டோபர் முதல் வாரத்திலிருந்து ஷூட்டிங் தொடங்குகிறது. இந்த முறை படப்பிடிப்பை முழுக்க முழுக்க கேரளாவில் வைத்துள்ளார் இயக்குநர்.

தொடுபுழா
இதற்காக கமலஹாசன், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் கேரளா பயணமாகிறார்கள். அங்கு சில வாரங்கள் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்கள். ‘திரிஷ்யம்' படப்பிடிப்பு நடந்த தொடுபுழா பகுதியில் உள்ள வீட்டிலேயே ‘பாபநாசம்' படப்பிடிப்பையும் நடத்துகின்றனர்.

அடுத்த ஆண்டு
நவம்பர் மாதம் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கமலஹாசனின் ‘விஸ்வரூபம்-2', ‘உத்தமவில்லன்' படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இப்படங்கள் வெளியானதும் ‘பாபநாசம்' ரிலீசாகுமாம்.


Click it and Unblock the Notifications











