Kamal: கமல், ஸ்ருதிஹாசன் கூட்டணியில் இப்படியொரு ப்ராஜெக்ட்டா..? அப்பா, மகள் கொடுக்கப் போகும் ட்ரீட்

சென்னை: விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிப்பதில் ரொம்பவே பிஸியாகிவிட்டார் கமல்ஹாசன்.

இந்தியன் 2, கல்கி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருவதோடு, ஹெச் வினோத், மணிரத்னம் ஆகியோருடனும் கூட்டணி வைக்கவுள்ளார்.

இன்னொரு பக்கம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல்ஹாசனும் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் கூட்டணி வைத்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Kamal: Shruti Haasan Teams Up With Her Father Kamal For A Musical Project

மகளுடன் கூட்டணி வைத்த கமல்ஹாசன்: உலகநாயகன் கமல் தற்போது தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் கூட்டணி வைத்துள்ளாராம். இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாக நடித்து வரும் கமல், விரைவில் H வினோத் இயக்கும் KH 233ல் இணையவுள்ளார். அதேநேரம், விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் தொடங்கவுள்ளது. இன்னொரு பக்கம் மணிரத்னமும் KH 234 படப்பிடிப்பை தொடங்க ரெடியாகிட்டாராம்.

சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் உலகநாயகனின் அதிரடி ஆட்டம் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதனால், 24 மணி நேரமும் ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறார். இதனிடையே தான் தனது மகள் ஸ்ருதிஹாசனுக்காக, ஒரு ப்ராஜ்க்ட்டில் இணைந்துள்ளார் கமல். அப்பாவும் மகளுமாக சேர்ந்து கலக்கவுள்ள இந்த ப்ராஜெக்ட்டை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். இசையில் அதிக ஆர்வத்துடன் இருந்த ஸ்ருதி, பாடகியாக வேண்டும் என்றே விரும்பினார். ஆனால், நடிப்பிலும் அவருக்கு ஏராளமான ஆஃபர்கள் கிடைக்க, தற்போது கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் அப்பா கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு மியூசிக் ஆல்பம் தயாரிக்க ரெடியாகிவிட்டாராம் ஸ்ருதிஹாசன். இதற்கு கமல்ஹாசனும் ஓக்கே சொல்லிவிட, விரைவில் அதற்கான ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம். இளையராஜாவின் இசை கச்சேரி ஒன்றில், கமலும் அவரது மகள் ஸ்ருதியும் இணைந்து பாடல் பாடி அசத்தியிருந்தனர். அதற்கே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், தற்போது கமல்ஹாசனும் ஸ்ருதிஹாசனும் இணைந்து மியூசிக் ஆல்பம் செய்யவிருப்பது, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இசை ஆல்பத்தின் படப்பிடிப்பு, ரிலீஸ் தேதி உட்பட அனைத்து அபிஸியல் அப்டேட்ஸும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X