ஆண்டவரே, கஸ்தூரிக்கு ஒரு உண்மை அதுவும் இப்பவே தெரிஞ்சாகணுமாம்

By Siva

Recommended Video

கஸ்தூரிக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணுமாம்!

சென்னை: தூக்கம் போச்சு, எனக்கு இப்பவே அது தெரிஞ்சாகணும் என்று கமலின் கட்சி பெயர் குறித்து ட்வீட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி.

உலக நாயகன் கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். அது என்ன மய்யம் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். மேலும் கட்சி கொடி குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி கமலின் கட்சி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

வையாபுரி

சினேகன், வையாபுரி, ஸ்ரீப்ரியா...விஜய் டிவி மகேந்திரன்...மொத்த பிக் பாஸ் டீம் இறங்கியிருக்கு. விவோ தான் பிரதான ஸ்பான்ஸரா? எலிமினேஷன் கூட வரும்ல? என்று கேட்டுள்ளார் கஸ்தூரி.

கஸ்தூரி

கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் உங்களை அழைக்கவில்லையா என்று கேட்டார். அதற்கு அவரோ, அழைத்தார்கள் ஆனால் விருப்பம் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

மய்யம்

எனக்கு ஒரு அய்யம்.... அது என்ன மய்யம் ?

மையம் வேற , மய்யம் நா வேற போல.

சரி, அத்த வுடு. ம-ய்-ய-ம் இங்கிலீசுல MA-Y-YA-M தானே ? MaiAm மைஅம் னு வருது ....

#SleepGone #maiam #இப்பவே_தெரிஞ்சாகணும்... என்று ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.

பொருள்

கஸ்தூரியின் சந்தேக ட்வீட்டை பார்த்த ஒருவர் மய்யம் என்றால் மயானம் என்று பொருள் என்றார். அதற்கு கஸ்தூரி அய்யோ, நெசமாவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X