உலகநாயகன் எப்பவுமே எல்லாருக்கும் முன்னோடிதான்... ஸ்டண்ட் இரட்டையர்கள் பளீச்
சென்னை : உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம். இந்தப் படத்தில் ஸ்டண்ட் அமைத்துள்ளனர் இரட்டையர்கள் அன்பறிவ். இவர்களது உழைப்பில் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. இதுகுறித்து படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவற்றில் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

விக்ரம் படம்
உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் விக்ரம். வரும் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அன்பறிவ் ஸ்டண்ட்
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள நிலையில் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். மேலும் படத்தின் ஸ்டண்டை இரட்டையர்கள் அன்பறிவ் மேற்கொண்டுள்ளனர். படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை மூலம் வெளிப்பட்டுள்ளது.

தயங்கிய இரட்டையர்கள்
ஆரம்பத்தில் உலகநாயகனுடன் இணைவதில் தயக்கம் இருந்ததாகவும் அவர் ஒரு ஜாம்பவான், சர்வதேச திரைப்படங்களில் அவர் இணைந்து பணியாற்றியுள்ளதால் அவருடன் இணைந்து பணியாற்றுவது கடினம் என்று தாங்கள் கருதியதாகவும் அன்பறிவ் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல கமல் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசுவார் என்றும் அவரை புரிந்துக் கொள்வது கடினம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கமல் எப்போதும் முன்னோடிதான்
கமல் எப்போதுமே எல்லாரையும் விட ஒரு படி முன்னேதான் செயல்படுவார் என்றும் அன்பறிவ் குறிப்பிட்டுள்ளனர். முதல் நாளில் ஸ்டண்ட் காட்சிகள் குறித்து தாங்கள் கமலுக்கு விவரித்ததாகவும் அவரும் மிகவும் கவனத்துடன் அதைக் கேட்டுக் கொண்டதாகவும் அன்பறிவ் தெரிவித்தனர்.

கமல் பாராட்டு
ஸ்டண்ட் காட்சிகள் குறித்து கேட்டறிந்த கமல், அவர்களை பாராட்டியதாகவும், மேலும் தயாரிப்பாளர் மகேந்திரனிடமும் தங்களை பாராட்டி பேசியதாகவும் அவர்கள் மேலும் கூறினர். கமல் எப்போதுமே யாரையும் எளிதாக பாராட்டிவிட மாட்டார் என்றும் ஆனால் தங்களுக்கு அந்த பாராட்டு கிடைத்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Recommended Video

கமல்ஹாசன் தயாரிப்பு
கமல்ஹாசன் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை அவரது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பாளர் மகேந்திரனுடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தில் மேலும் நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











