பக்கவாத்தியத்தை போர் முரசாக்கிவிட்டீர்கள்.. சுரேஷிடம் சண்டை போட்ட ரியோவை வெளுத்து வாங்கிய கமல்!
சென்னை: சுரேஷ் சொல்ல வந்ததையே கேட்காமல் சண்டை போட்டு விட்டீர்கள் என ரியோ ராஜை வெளுத்து விட்டார் நடிகர் கமல்ஹாசன்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஃபேஷன் ஷோ, ராம்ப் வாக், டேலன்ட் ரவுண்ட் என ஹவுஸ்மேட்ஸ்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
அந்த நிகழ்ச்சிக்கு சனம் ஷெட்டியும் பாலாஜி முருகதாஸும் நடுவர்களாக இருந்தனர். அப்போது கடைசி ரவுண்டில் போட்டியாளர்களிடம் பாலாஜி முருகதாஸ் கேள்விக் கேட்டார்.

இரண்டு முகம் உள்ளது
அப்போது, பாலாஜியின் கேள்விக்கு பதிலளித்த ரியோ எனக்கு இரண்டு முகம் உள்ளது. நான் நல்லவன், பொறுப்பானவன், சொன்ன வேலையே செய்பவன் என்ற முகம் தான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

கொளுத்திப்போட்ட மாஸ்க்
இதனை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியிடம், கேள்வி கேட்ட பாலாஜி எல்லாரையும் கொளுத்தி போட சொல்வீர்கள். நான் உங்களை வைத்து கொளுத்தி போடுகிறேன் என்று கூறி யாரெல்லாம் மாஸ்க் போட்டிருக்கிறார்கள் என்றார்.

என்னை சொல்லாதீங்க
அதற்கு பதில் கூறிய சுரேஷ் சக்கரவர்த்தி எல்லாருமே போட்டிருக்கிறார்கள்.. எல்லாருக்கும் இரண்டு முகம் இருக்கும்.. ரியோ சொன்னது போல என பேச தொடங்கினார். அதற்குள் என்ன சொல்ல வருகிறார் என்றே கேட்காத ரியோ என்னை எடுத்துக்காட்டாய் எடுத்து சொல்லாதீங்க..

ரியோ ஆவேசம்
சொல்லக்கூடாதுன்னா சொல்லக் கூடாது என அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமால் செம ரூடாக பேசினார்.அதற்கு பதிலளித்த சுரேஷ் சக்கரவர்த்தி என்ன பேச வந்தார் என்பதை சொல்லக்கூட விடாமல்.. முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு ஆவேசமாக பேசினார்.

ஊன்று கோளாய்..
மேலும் தேங்க்யூ என்று சொல்லும் போது கூட அவ்வளவு ஆட்டியூட் காட்டினார் ரியோ.கடைசியாக உங்களை உதாரணமாய் கூறவில்லை.. ஊன்றுகோளாய் எடுத்துக்கொண்டுடேன். உங்களை நல்ல படியாக பேசிக்கூட சொல்லக்கூடாதா என்றார் சுரேஷ் சக்கரவர்த்தி.

திட்டும் ரசிகர்கள்
ஆனால் அதையும் ஏற்கவில்லை ரியோ, இந்த முகம்தான் தெரியக்கூடாது என்று நினைத்தேன் என கோபமாக பேசினார் ரியோ. ரியோவின் பிகேவிங் ரசிகர்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. அன்று முதலே ரியோவை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

வழி மொழிகிறேன்..
இந்நிலையில் அந்த விவகாரத்தை கையில் எடுத்த கமல், ரியோவை விளாசி தள்ளினார். ஒருவர் ஒரு விமர்சனம் சொல்லும் போது அதை முழுவதும் கேட்காமல் பேசவே கூடாது என்றால் எப்படி? சிலர் பேசி முடித்ததும் நான் அவரை வழி மொழிகிறேன் என்பார்கள்.
Recommended Video

போர் முரசாக்கிவிட்டீர்கள்
அப்படிதான் நீங்கள் சொன்னதை அவர் சொல்ல வந்தார். அதை நீங்கள் காது கொடுத்து கேட்கவேயில்லை. அவர் உங்களை பக்க வாத்தியமாகதான் எடுத்தார், ஆனால் அதனை நீங்கள் கோபப்பட்டு போர் முராசாக்கிவிட்டீர்கள் என்று மரண அடி கொடுத்தார். ஆனாலும் அதை ஏற்கவில்லை ரியோ.


Click it and Unblock the Notifications











