வேணாம்னா நீங்களே பேசிடுங்க.. மூக்கை நுழைத்த அனிதா.. கடுப்பான கமல்.. சூடு பறக்கும் 3வது புரமோ!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஆரி அனிதா பஞ்சாயத்தை கமல் கையில் எடுத்து பேசும் போது, ஆரி தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

கமல் அனிதாவுக்காக பேசும் போது மூக்கை நுழைத்த அனிவால் அப்செட்டான கமல், வேணாம்னா நீங்களே பேசிடுங்க அனிதா என கடிந்து கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அனிதா தான் டார்கெட்

அனிதா தான் டார்கெட்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அனிதா சம்பத் வெளியேறிய நிலையில், இன்றைய மூன்று புரமோவிலும் அனிதாவையே டார்கெட் செய்து பிக் பாஸ் எடிட்டர் எல்லா புரமோக்களிலும் அவரையே காட்டி உள்ளார். தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் அனிதா, ஆரி பஞ்சாயத்தை கமல் கையில் எடுத்துள்ளார்.

முதல் புரமோ

முதல் புரமோ

தப்பு பண்றீங்கன்னு சுட்டிக் காட்டுனா, நான் மட்டுமா தப்பு பண்றேன் என கேக்குறாங்க என முதல் புரமோவிலேயே அனிதா சம்பத் ஆக்ரோஷமாக ஆரியை பார்த்து பேசிய காட்சிகளை போட்டு கமல் பேசியதை சேர்த்து நல்லாவே சிக்னல் கொடுத்துவிட்டார் பிக் பாஸ் எடிட்டர்.

பருப்பு மேட்டர்

பருப்பு மேட்டர்

சனம் ஷெட்டி இருக்கும் போது எலுமிச்சை மேட்டர் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது அனிதாவின் பருப்பு மேட்டர் வார இறுதி பஞ்சாயத்து வரை வந்துவிட்டது. பாலும், தெளிதேனும், பருப்பும் என கமல் அனிதாவை சமைக்க தெரியுமா? என நல்லாவே பஞ்சர் பண்ணி உள்ளார். இன்னைக்கு எபிசோடில் செம என்டர்டெயின்மென்ட் இருக்கு என நல்லாவே தெரிகிறது.

பேச்சு சுதந்திரமில்லை

பேச்சு சுதந்திரமில்லை

இந்த வீட்டில் அனிதாவிடம் பேசும் போது மட்டுமே பேச்சு சுதந்திரமில்லை என்பது போல ஃபீல் பண்ணது அனிதா கிட்ட மட்டும் தான் சார் என கமலிடம் ஆரி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பார்த்தேன் இந்த வாட்டி பயங்கர சூடாகிட்டேன் என கமல் பேச அனிதா நடுவே குறுக்கிட்டார்.

வேணாம்னா நீங்களே பேசிடுங்க

வேணாம்னா நீங்களே பேசிடுங்க

சார் என்னோட ஃபேமிலி பெரிய வீக்னெஸ் சார் என ஆரம்பித்த அனிதாவிடம், நான் உங்களுக்காகத்தான் பேசுறேன், வேணாம்னா நீங்களே பேசிடுங்க என கடுப்பாகி விட்டார் கமல். நீங்களே பேசிடுங்க சார்.. ப்ளீஸ் சார் என மறுபடியும் இஷ்டத்துக்கு ஆக்டிங் கொடுக்க ஆரம்பித்து விட்டார் அனிதா.

காது குடையிற பட்ஸ்

காது குடையிற பட்ஸ்

அடுத்ததாக ஆரிக்கு ஒரு பரிசு கொடுத்தீங்களே என கமல், அனிதா கொடுத்த துணி துவைக்கிற பிரஷ் மற்றும் காது குடையிற பட்ஸை கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பியதும் புரமோவில் அனல் பறக்கிறது. பிக் பாஸ் ரசிகர்களும் தங்களது கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அழுதுவிட்டார் அனிதா

அழுதுவிட்டார் அனிதா

ஆரிக்கு கொடுத்த பரிசு பற்றி கேட்டு ஆப்பு வைத்து விடுவாரோ என எண்ணிய அனிதா சம்பத், எனக்கு ஆரியை ரொம்பவே பிடிக்கும், எப்பவுமே வான்டட்டா ஹர்ட் பண்ணனும்னு நினைக்க மாட்டேன் எனக் கூறி சாரி ஆரி என அழுதுவிட்டார் அனிதா சம்பத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X