twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடமை தவற மாட்டேன்...என்ட்ரியிலேயே நெட்டிசன்களுக்கு சவுக்கடி கொடுத்த கமல்

    |

    சென்னை : 100 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 49 வது நாளை எட்டி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டனர். 12 பேர் போட்டியாளர்களாக இருந்தனர்.

    அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய் டிவி அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய் டிவி

    இந்நிலையில் வைல்கார்டு என்ட்ரி மூலம் 47 வது நாளில் அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இந்த வாரம் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், குறைந்த ஓட்டுக்கள் பெற்ற இசைவாணி வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தான் வீடு

    இது தான் வீடு

    இந்நிலையில் 49 வது நாளான இன்று, கமல் வழக்கம் போல் அசத்தலான என்ட்ரி கொடுத்தார். வந்ததுமே, சிகாகோவில் இருக்கிறார். இந்த வாரம் பிக்பாசிற்கு வரமாட்டார் என பலர் சொல்லி உள்ளனர். சோஷியல் மீடியா வாயிலாக தெரிந்து கொண்டேன். அது வெளியூர். இது தான் என்னுடைய வீடு. வீட்டிற்கு வராமல் எப்படி இருப்பேன். வந்தே தான் தீர வேண்டும்.

     இதுக்கு தான் போனேன்

    இதுக்கு தான் போனேன்

    பிக்பாசை விட அப்படி என்ன சிகாகோ பயணம் முக்கியம் என பலர் கேட்கலாம். இது திடீரென திட்டமிடப்பட்டது அல்ல. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கமல் ஹவுஸ் ஆஃப் காதி துவக்க விழாவிற்காக தான் சிகாகோ சென்றேன் கொரோனா பெருந்தொற்று காரணமாக இதை துவக்குவது தாமதமானது. ஏன் சிகாகோவில் துவக்குகிறீர்கள் என கேட்டால், நாம் எங்கு சென்று பேசினால் உலகம் முழுக்க ஒலிக்குமோ அங்கு சென்று தான் பேச வேண்டும். அதற்காக தான் சிகாகோ பயணம்.

    கடமை தவற மாட்டேன்

    கடமை தவற மாட்டேன்

    நான் கடமை தவற மாட்டேன். இதுவரை கடமை தவறியதும் இல்லை. என்னுடைய கடமையை சரியாக நிறைவேற்றி வருகிறேன். கடமை தவறியதாக ஒரு போதும் பெயர் வாங்கியது கிடையாது. இனியும் அப்படி செய்ய மாட்டேன்.

     உலகம் முழுதும் பரவும்

    உலகம் முழுதும் பரவும்

    இது சிகாகோ மட்டுமல்ல நியூயார்க், லண்டன் என உலகம் முழுவதும் விரிவடைய உள்ளது. என் அப்பா கதர் சட்டை அணிந்ததை பார்த்து வளர்ந்தவன் நான். அவர் தான் என்னுடைய ரோல் மாடல். வழக்கறிஞரான அவர் போட்டிருக்கும் கோட், கவுன் என அனைத்தும் கதரில் இருக்கும். கேட்டில் இருக்கும் பட்டன் கூட பிளாஸ்டிக்காக இருக்காது. நூலினை வைத்து தான் பட்டனே தயாரித்திருப்பார்கள்.

    சுயபெருமை அல்ல

    சுயபெருமை அல்ல

    அவர் கோர்ட்டில் பார் கவுன்சிலில் கதருடன் நடந்தார். நாங்கள் ரேம் வாக் போட்டுக் கொண்டிருக்கிறோம். அது தான் வித்தியாசம். இது பெருமைக்காக துவங்கப்பட்ட நிறுவனம் அல்ல. மைனல் 3 டிகிரி நடக்க வேண்டும் என்பதல்ல. அனைத்து சீசனிலும் அணிந்து கொள்ள கூடியதாகவே இந்த ஆடை இருக்கும். அது தான் லட்சியமாக இருக்கும். இது சுய பெருமை அல்ல என கமல் பேசி உள்ளார்.

    சவுக்கடி கொடுத்த கமல்

    சவுக்கடி கொடுத்த கமல்


    வந்ததுமே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களை கமல் விளாசியது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருவதை கமல் ஒரே மேடையில், சவுக்கடி கொடுத்தது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

    English summary
    On the 49 th day of bigg boss tamil season 5, kamal slams netizens on rumours. he said that he never skips his duty. and kamal explains his kamal house of kadhar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X