பிரியங்காவை பஞ்சராக்கிய கமல்.. அக்ஷராவுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் விதிகள் பொதுவானது என சாட்டையடி!

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களை இஷ்டத்துக்கு இப்படி ஆட விடுறாங்களே என பார்த்தால் சனிக்கிழமை எபிசோடில் வாத்தி ரெய்டை ஆரம்பித்து விட்டார் நம்மவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அக்‌ஷராவை டார்கெட் பண்ண பிரியங்காவின் பஞ்சாயத்தை கையில் எடுத்து நிருப் கையில் பிரியங்கா எழுதிய மேட்டரை போட்டு உடைத்து வெளுத்து வாங்கிட்டார் கமல்.

அபிஷேக் நம்பர் 2

அபிஷேக் நம்பர் 2

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு அபிஷேக் ராஜாவின் அட்டகாசமே ரசிகர்களை இரிடேட் செய்து வரும் நிலையில், இன்னொரு அபிஷேக்காக பிரியங்கா போட்டு வரும் ஆட்டம் ரொம்பவே அதிகமாகி விட்டது. எந்தவொரு ரூல்ஸையும் மதிக்காமல் இஷ்டத்துக்கு கேம் ஆடலாம் என பிரியங்கா ஆடி வருவது ரசிகர்களை எரிச்சலைடைய செய்துள்ளது.

வாத்தி ரெய்டு இருக்கு

வாத்தி ரெய்டு இருக்கு

சனிக்கிழமை எபிசோடில் கமல் கடந்த வாரம் அபிஷேக், பிரியங்கா, நிருப் என பல போட்டியாளர்கள் பிக் பாஸ் விதிகளை மீறியது குறித்து கேட்க வேண்டும் என்றும் இந்த ஷோவை முறையாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தனர். அந்த தகவல்கள் எல்லாம் கமல் காதுக்கு செல்ல வாத்தி ரெய்டை இன்றைய எபிசோடில் ஆரம்பிக்க உள்ளார்.

அக்‌ஷரா மேட்டர்

அக்‌ஷரா மேட்டர்

அக்‌ஷரா பேப்பரில் எழுதி ஃபிளஷ் செய்தது குறித்து பப்ளிக்காக பேசி அவரை அவமானப்படுத்தி அழ வைத்த பிரியங்காவிடம் அந்த பஞ்சாயத்தை பற்றி பேசிய கமல், "பிரியங்காவுக்கு அக்‌ஷரா எழுதி காட்டியது குறித்த விமர்சனம் இருந்தது" என்றதும் அக்‌ஷராவை மறுபடியும் அழ வைக்கலாம் என நினைத்து "ஏன்னா க்ளியரா சொல்லி இருந்தாங்க யாரை பத்தியும் இது பண்ணக் கூடாது" என தவளை தன் வாயால் கெடும் என்பதற்கேற்ப பிரியங்கா வான்டட்டாக வந்து வாத்தி கையில் சிக்கிக் கொண்டார்.

பஞ்சராக்கிய கமல்

பஞ்சராக்கிய கமல்

உடனே இடை மறித்து பேசிய கமல் "விமர்சகர்கள், நாம சரியா இருக்கோமான்னு ஃபர்ஸ்ட் பார்க்கணும்.. நீங்க அந்த மாதிரி செஞ்சதே இல்லையா" என கேட்க அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் கை தட்டி பிரியங்காவை கமல் பஞ்சராக்கியதை கண்டு உற்சாகமடைந்தனர்.

அக்‌ஷராவுக்கு மட்டுமல்ல

அக்‌ஷராவுக்கு மட்டுமல்ல

"நான் எதையும் எழுதி காட்டல சார்" என பிரியங்கா பம்ம.. "நீங்க நிருப் கையில எழுதி காட்டனத அனைவரும் பார்த்தோ... அதுக்குத்தான் இந்த கைதட்டல்.. அக்‌ஷராவுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் விதிகள் பொதுவானது என பிரியங்காவை பொளந்து கட்ட" இன்னைக்கு செம கச்சேரி இருக்கு என பிக் பாஸ் ரசிகர்கள் எபிசோடை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பீஸ் போன பல்பு

பீஸ் போன பல்பு

இதுக்குப் பேர் தான் சரியான 'நோஸ் கட்' என புரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் கடைசியில் பிரியங்காவின் முகம் பீஸ் போன பல்பு போல மாறியதை பார்த்து கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனீங்க பிரியங்கா என ட்ரோல் மீம்களை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X