கன்ஃபெஷன் ரூமில் தாமரை, பிரியங்கா, அக்ஷரா மற்றும் அமீரை கதற விடும் கமல்.. அனல் பறக்கும் புரமோ!
சென்னை: இன்றைய முதல் புரமோவிலேயே கன்ஃபெஷன் ரூமிற்கு போட்டியாளர்களை அழைத்து மந்திரித்து விடலாமா? என கேட்ட கமல் மூன்றாவது புரமோவில் அதை அட்டகாசமாக செய்துள்ளார்.
பாவனி அமீர் முத்தக் காட்சி குறித்து கமல் ஏன் கேட்கவே இல்லை என பொங்கிய நெட்டிசன்களுக்கு நிச்சயம் இன்றைய நிகழ்ச்சியில் பொங்க சோறு கிடைக்கும் என தெரிகிறது.
தாமரை, பிரியங்கா, அக்ஷரா மற்றும் அமீரை கதற விட்டுள்ள மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

கன்ஃபெஷன் ரூம் கதறல்கள்
சிவாஜி படத்தில் ஆபிஸ் ரூம் உங்களை அன்போடு அழைக்கிறது என அழைத்து அடித்து துவைத்து அனுப்புவது போல 83வது நாளில் கமல் சார் கன்ஃபெஷன் ரூம் உங்களை அன்போடு அழைக்கிறது என சொல்லி உள்ளே வரவழைத்து ஆப்பு அடித்து அனுப்பப் போகிறார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

பேசி முடிப்பதற்குள் சண்டை
தாமரை செல்வி செய்யும் தவறாக அவரது கணவர் சொன்ன விஷயத்தை பார்த்திருப்பார் போல கமல் சார் அதை வைத்தே தாமரையை யாராவது பேசி முடிப்பதற்குள் இங்கபாரு பாப்பா என சண்டைக்கு கிளம்பிடுறீங்களே என ஆரம்பத்திலேயே தாமரைக்கு நறுக்கென ஒரு குட்டு வைத்து பேசும் காட்சி மூன்றாவது புரமோவில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பிரியங்காவுக்கு திட்டு
உங்க கேரக்டரே ஒரு ஜாலியான கேரக்டர் என அவங்க முடிவு பண்றதுக்கு முன்ன நீங்களே முடிவு பண்ணிட்டீங்க என அடுத்ததாக பிரியங்காவையும் கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து பிரமாதமாக சீர் செய்து அனுப்பி உள்ளார் கமல். சார் இப்போ ஒண்ணு செய்றீங்களே சார் அது நல்லா இருக்கு சார்.. கன்ட்டினியூ பண்ணுங்க என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து பிரியங்காவை கலாய்த்து வருகின்றனர்.

ஆளையே காணோம்
பிசிக்கல் டாஸ்க் வந்தால் சிபியாவது அமீராவது என ஆண் போட்டியாளர்களையே அலற விடும் படி விளையாடும் அக்ஷரா டாஸ்க் முடிந்ததும் எங்கே ஆளையே காணோம் என தேட வச்சிட்டீங்க என குகு பேபியை கருணையே இல்லாமல் கதற விட்டுள்ளார் கமல். இதுக்காகவே அவர் இந்நேரம் பெட்டியை பேக் பண்ணியிருப்பார்.

ஒரே இடத்தில் குவிப்பு
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக பாவனி மற்றும அமீர் பஞ்சாயத்தை கமல் கையில் எடுத்தது பிக் பாஸ் ரசிகர்களை ஆனந்தம் அடைய செய்துள்ளது. கடந்த வாரமே கண்டுக்காம போயிட்டாரே கமல் என கழுவி ஊற்றியவர்கள் எல்லாம் ஆறுதல் அடையும் அளவுக்கு உங்களுடைய குவிப்பு ஒரே இடத்தில் இருக்கிறது என நான் திட்ட வட்டமாக சொல்ல முடியும் என சாட்டையை சுழற்றும் காட்சிகள் அடங்கிய மூன்றாவது புரமோ இன்றைய ஷோவை பார்க்க ரசிகர்களை தூண்டி உள்ளது.

மற்றவர்களுக்கு எப்படி
தாமரை, அக்ஷரா, பிரியங்கா மற்றும் அமீருக்கு கமல் டோஸ் கொடுக்கும் காட்சிகள் மூன்றாவது புரமோவில் இடம்பெற்றுள்ள நிலையில், ராஜு, நிரூப், சிபி, வருண், சஞ்சீவ், பாவனி உள்ளிட்டோரிடம் கன்ஃபெஷன் ரூமில் என்ன மாதிரி அர்ச்சனை கமல் கொடுக்கப் போகிறார் என்கிற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











