என்னை நடிக்க விட்டால் நான் 300 கோடி சம்பாதிப்பேன்.. விக்ரம் பட வசூலை நாசுக்காக வெளிப்படுத்திய கமல்!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வசூல்வேட்டை நடித்து வருகிறது விக்ரம் படம்

Recommended Video

திரையில் இருந்தாலும் தலைவர் தான்! அரசியலுக்கு நான் சம்பாதிக்க வரவில்லை.. ஓபனாக பேசிய கமல்ஹாசன்!

படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் படத்தின் வசூல் தற்போது சர்வதேச அளவில் 300 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் கமல் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுள்ள படம் விக்ரம். கடந்த 80களில் வெளியான விக்ரம் படத்தின் லீடில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

விக்ரம் 3 குறித்த அறிவிப்பு

விக்ரம் 3 குறித்த அறிவிப்பு

இதையடுத்து விக்ரம் 3 படத்தின் அறிவிப்பையும் கமல் இந்தப் படத்தின் பிரமோஷனின்போதே அறிவித்துவிட்டார். அந்தப் படத்தையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜே இயக்கவுள்ளார். அவர் அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

ரூ.300 கோடி வசூல்

ரூ.300 கோடி வசூல்

இந்நிலையில் தற்போது விக்ரம் படம் கடந்த 10 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் தாண்டியுள்ளது. படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் வசூல் கடந்த 10 நாட்களில் 310 கோடி ரூபாயாக காணப்படுகிறது. படம் இரண்டு வாரயிறுதிகளை கடந்துள்ள நிலையில் இந்த வசூல்வேட்டையை நடத்தியுள்ளது.

நடிக்கவிட்டால் ரூ.300 கோடி சம்பாதிப்பேன்

நடிக்கவிட்டால் ரூ.300 கோடி சம்பாதிப்பேன்

இதனிடையே இன்றைய தினம் கட்சி கூட்டம் ஒன்றில் பேசியுள்ள நடிகர் கமல், பணத்தை பற்றி கவலைப்படாத ஒரு தலைவனே மக்களின் பணத்தேவையை அவர்களது சிறப்பான வாழ்வை உறுதிப்படுத்துவான் என்று தெரிவித்துள்ளார். தன்னை நடிக்கவிட்டால் தான் 300 கோடி ரூபாயை சம்பாதிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிப்பதில் கவனம்

நடிப்பதில் கவனம்

தான் தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால், தான் நன்றாக இருக்கலாம், தன்னுடைய உறவுகளுக்கு நண்பர்களுக்கு கொடுக்க முடிந்தவற்றை கொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இல்லையென்றால் இல்லையென்று தான் கூறுவேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை

வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை

தனக்கு வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை என்றும் கமல் கூறியுள்ளார். மனிதனாக இருப்பதே போதுமானது என்றும் தெரிவித்துள்ளார். இல்லாதபோது கொடுப்பது போல் ஏன் நடிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றவரை கொடுக்கவைத்துவிட்டு தான் கொடுத்ததாக ஏன் நடிக்க வேண்டும் என்றும் கமல் கேட்டுள்ளார்.

அரசியல் களம் குறித்து கமல்

அரசியல் களம் குறித்து கமல்

கமலின் விக்ரம் படம் கடந்த 10 நாட்களில் 300 கோடி ரூபாய்களை உலகளவில் வசூலித்துள்ளது. அதைக் குறிப்பிடும்வகையில் தான் தற்போது கமல்ஹாசன், தன்னை நடிக்க விட்டால் 300 கோடி ரூபாய்களை சம்பாதிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் தான் மக்களுக்காக அரசியல் தளத்தில் செயல்படுவதாக அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X