கேப்புல கெடா வெட்டிய கமல்.. செங்கோலை வைத்து பக்கா அரசியல்.. பல்ஸைப் பிடித்த நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி அரசியல் பேசி வரும் கமல், இன்றும் தனது வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.
கடந்த பிக்பாஸ் சீசன்களிலேயே ஏகப்பட்ட அரசியல் பேசினார் நடிகர் கமல். இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் தமிழகம் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் இறங்கியுள்ளனர்.

அரசியல் மேடை
இந்நிலையில் உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்கள் உற்று நோக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் அதனை தனக்கான அரசியல் பிரச்சார மேடையாகவும் பயன்படுத்தி வருகிறார். கடந்த சீசன்களில் நீர் மேலாண்மை, பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணம், இந்தி திணிப்பு என பல விஷயங்கள் குறித்து பேசினார்.

கெடா வெட்டும் கமல்
தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கிடைத்த கேப்பில் கெடா வெட்ட மறப்பதில்லை கமல். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே தப்புன்னா தட்டிக்கேட்பேன், நல்லதுன்னா தட்டிக்கொடுப்பேன் என பொத்தாம் பொதுவாய் அடித்து விட்டார்.

பிரதமர்கள் குறித்தும் பேச்சு
கடந்த வாரங்களில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் என்றும் யோசிச்சு நல்ல முறையா போடுங்க.. போட்டுட்டு அப்புறம் வருத்தப்படுறதுல அர்த்தமே இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து முன்னாள் மற்றும் இன்னாள் பிரதமர்கள் குறித்தும் சாடினார் கமல்.

செங்கோலால் வந்த பிரச்சனை
இந்நிலையில் சனிக்கிழமையான இன்று ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார் கமல். கடந்த வாரம் நாடா காடா டாஸ்க்கின் போது, சுரேஷ் சக்கரவர்த்தியின் கையில் இருந்த செங்கோலால் வந்த பிரச்சனை குறித்து பேசும் கமல் அதிலும் அரசியல் பேச தவறவில்லை.

நம்ம கையில எடுக்கனும்..
கையில் செங்கோலுடன் தோன்றிய கமல், தனது கையில் உள்ள செங்கோலை காட்டி, இது யார் கையில இருக்கனும்ங்றது ரொம்ப முக்கியம். இருக்குற நிலைமையை பார்த்தா நம்ம கையில எடுக்கனும் போல்ருக்கு என செங்கோலை கை மாத்துகிறார்.

ஆட்சி அதிகாரம்
செங்கோல் என்பது நாட்டை ஆளும் மன்னர்கள், ஆட்சியாளர்கள் கையில் இருக்கும் ஆயுதம். அப்படி இருக்கையில் ஆளும் கட்சி குறித்து அதிரடியாக விமர்சனம் செய்து வரும் கமல் செங்கோல் நம்ம கைக்கு வரனும், அதாவது ஆட்சி அதிகாரம் தங்களின் கைக்கு வரவேண்டும் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
அரசியல் பாதி
புரமோவில் கமல் பேசிய அரசியலை கவனித்த இந்த நெட்டிசன், இவரு பேசுறதுல பாதி இந்த நிகழ்ச்சியை பத்தி பாதி அரசியல் பத்தி.. கிடைக்குற கேப்புல கடா வெட்டுறாரு என டிவிட்டியுள்ளார்.
Keep your talking points limited to the BB house please.#BiggBossTamil4 #BiggBossTamil — kay (@kflyyt) October 24, 2020 '>
ரொம் பழசாயிடுச்சு...
மற்றொரு நெட்டிசனான இவர், உங்கள் அரசியல் டபுள் மீனிங் பேச்சு மிகவும் பழையதாகி வருகிறது கமல் சார். நீங்கள் ஒவ்வொரு முறையும் இதைச் செய்தால் பரவாயில்லை, ஆனால் ஒவ்வொரு வார இறுதியில் அதைச் செய்வது உங்கள் "பேச்சுக்களை" எங்களை ஃபார்வர்டு செய்ய வைக்கிறது நீங்கள் பேசும் பாயிண்டுகளை பிக்பாஸ் வீட்டிற்கு மட்டும் பயன்படுத்துங்கள் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்
அரசை விளாசுகிறார்
புரமோவில் கமல் பேசிய அரசியலை பார்த்த இந்த நெட்டிசன், உண்மைதான் புரோ கிடைக்கிற கேப்புல அரசாங்கத்த விளாசுறாரு என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











