அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடக்கும் எல்லா சம்பவங்களையும் கணக்கு போடும் அனிதா சம்பத்தை வச்சு செய்துள்ளார் கமல்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது பெயரை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாய் உள்ள அனிதா, அந்த கவனத்தினாலேயே தனது பெயரை கெடுத்து வருகிறார்.
எந்த ஒரு விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், எதிர் வினையாற்றி வருகிறார். சின்னச்சின்ன பிரச்சனைகளையும் பெரிதுபடுத்தி வருகிறார்.

அனிதா டிராமா
இந்நிலையில் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் கார்னர் செய்யப்படுவது குறித்து பேச ஆரம்பித்தார் கமல். ஆனால் தொடங்கும் போதே கடந்த வாரம் அனிதா செய்த டிராமாவை வைத்து தொடங்கினார்.

நான் குழந்தையில்லை
கடந்த வாரம் தனக்கு பேச வாய்ப்பே கிடைக்கவில்லை. அதனால்தான் தன்னை பற்றி ஹவுஸ்மேட்ஸுக்கு தெரியவில்லை நாமினேஷன் வரை வந்துள்ளேன் என கூறி அதகளப்படுத்தினார். தனக்கு கல்யாணமாயிடுச்சு தான் ஒன்றும் குழந்தை இல்லை என்றும் கதறினார்.

ரியோ பிரமிப்பு
சின்ன பசங்க பேசுவதை கேட்கிறீர்கள், பெரியவர்கள் பேசுவதை கேட்கிறீர்கள், இடைப்பட்ட நான் பேசுவதை கேட்க மறுக்கிறீர்கள் என கண்ணீர் மல்க பேசி ஆரவாரம் செய்தார். அவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்த ரியோ பிரமித்து போய் நின்றார்.

கமல் கலாய்
இந்நிலையில் அந்த விவகாரத்தை தனது கையில் எடுத்த கமல, எழுந்து நின்ற அனிதாவை நீங்க உட்காருங்க என்றார். அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லை என்பதுதானே அவருடைய பிரச்சனை, என்ற கமல் அவருக்கு இடம் கொடுங்க உட்காரட்டும் என டபுள் மீனிங்கில் பேசினார்.

ஜாக்கிரதையா இருங்க
தொடர்ந்து பேசிய அனிதா, இடைப்பட்ட நாங்களேதான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார். அதற்கு நீங்கள்தான் கிடைத்த வாய்ப்பில் அதிகம் பேசுவதாக எனக்கு தோன்றுகிறது, ஸ்பேஸே விடாமல் பேசுவது நீங்கதான்னு எனக்கு தோனுது என்றார் கமல்.

ஜாக்கிரதையா இருங்க
தொடர்ந்து ஹிட்லரை எடுத்துக்காட்டாய் எடுத்த கமல், ஹிட்லர் இப்படிதான் ஒரு பக்கம் மலையாய் இருக்கிறது, மறுப்பக்கம் கடலாய் இருக்கிறது, மக்கள் வசிக்க இடமில்லை எனறார். ஆகையால் ஸ்பேஸ் இல்லன்னு சொல்றவங்கக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்று ஹவுஸ்மேட்டுகளை எச்சரித்தார் கமல்.

கணக்கு போடாதீங்க
மேலும் ஹவுஸ்மேட்டுகளிடம், இடம் கொடுங்க.. ஆனா ரொம்ப கொடுத்துறாதீங்க.. என்ற கமல், அனிதாவையும் நீங்க ரொம்ப கணக்கு போடாதீங்க, கவலையும் படாதீங்க என அனிதாவுக்கும் கமல் அட்வைஸ் செய்தார்.

புடிச்சுட்டாங்கப்பா
கமல் சொன்னதையெல்லாம் கேட்ட அனிதா சார் நீங்கள் என்ன சொன்னாலும் என்னை கலாய்ப்பது போன்றே உள்ளது என்றார். அதனை பார்த்த கமல் அய்யோ புடிச்சுட்டாங்கப்பா என்று வாயில் கையை வைத்து நக்கலாய் சிரித்தார்.


Click it and Unblock the Notifications











