twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாபநாசம் டப்பிங்... இயக்குநர் சுகா உதவியுடன் சுத்தமான நெல்லைத் தமிழ் பேசும் கமல்!

    By Shankar
    |

    பாபநாசம் படத்தின் ஷூட்டிங்கை குறுகிய காலத்தில் முடித்துவிட்டுத் திரும்பியுள்ள கமல், அடுத்ததாக அந்தப் படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாகியுள்ளார்.

    மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றியடைந்த ‘த்ரிஷ்யம்' படத்தை தமிழில் ‘பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள்.

    மலையாளத்தில் த்ரிஷ்யத்தை இயக்கிய ஜீத்த ஜோசப்தான் இந்தப் படத்தின் இயக்குநர்.

    பாபநாசம்

    பாபநாசம்

    இப்படத்தில் மோகன்லால் நடித்த வேடத்தில் கமலும், மீனா நடித்த வேடத்தில் கௌதமியும் நடித்து வருகிறார்கள். மேலும், கலாபவன் மணி, சார்லி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    ஜெயமோகன்

    ஜெயமோகன்

    படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் திருநெல்வேலி மற்றும் கேரளாவில் நடந்து முடிந்தது.

    டப்பிங்

    டப்பிங்

    இந்நிலையில், இன்று இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர். கமல்ஹாசன் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை நேற்று பேசினார்.

    நெல்லை தமிழ்

    நெல்லை தமிழ்

    இந்த டப்பிங்கின்போது எழுத்தாளர் ஜெயமோகனும் உடனிருந்தார். மேலும் வசனம் ஒரிஜினல் திருநெல்வேலி ஸ்லாங்கில் வரவேண்டும் என்பதற்காக, அந்தப் பகுதியைச் சேர்ந்த இயக்குநர் சுகாவையும் உடனிருக்க வைத்து வசனங்களைப் பேசினார் கமல்.

    3 படங்கள்

    3 படங்கள்

    கமல் நடிப்பில் ‘விஸ்வரூபம்-2', ‘உத்தம வில்லன்' ஆகிய படங்கள் ஏற்கெனவே ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் எந்தப் படத்துக்கும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

    English summary
    Kamal Hassan has started dubbing for Pabanasam movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X