சிரிக்காதீங்க பாலாஜி.. என்ன திட்டுனீங்க அந்த வார்த்தை ஞாபகம் இருக்கா? சாட்டைய சுழற்றும் கமல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீடு கடந்த வாரம் முழுக்க சண்டையும் சச்சரவுமாய் இருந்தது.

குறிப்பாக கடந்த திங்கள் கிழமை எபிசோடில் சனம் ஷெட்டியை பாலாஜி முருகதாஸ் தறுதலை என்று பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீ பெரிய இவளா?

நீ பெரிய இவளா?

பல முறை சனம் ஷெட்டியை ஏய் தறுதலை தறுதலை என்று பேசிய பாலாஜி, நீ பெரிய இவளா என்றும் தரக்குறைவாக பேசினார். பாலாஜி அப்படி பேசியதை ஆரியும் அனிதாவும் மட்டுமே கண்டித்தனர்.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத பாலாஜி, ஆரியிடம் எகிறினார். பாலாஜி சனம் ஷெட்டியை தறுதலை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பாலாஜியை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ரெட் கார்டு கொடுக்க வேண்டும்

ரெட் கார்டு கொடுக்க வேண்டும்

மேலும் நடிகர் கமல்ஹாசன் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்றும் கண்டிக்க வேண்டும் என்றும் அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது.

தறுதலை விவகாரம்

தறுதலை விவகாரம்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. முதல் புரமோவில் கமலின் பிறந்தநாள், பிக்பாஸின் வாழ்த்து உள்ளிட்டவை இடம்பெற்ற நிலையில் இரண்டாவது புரமோவில் கமல் தறுதலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

எந்த மூடுல இருக்கீங்க?

எந்த மூடுல இருக்கீங்க?

இரண்டாவது புரமோவில் பேசத் தொடங்கும் கமல், இப்போ எந்த மூடுல இருக்கீங்க.. சண்டை மூடுலயா சமாதான மூடுலயா என்று கேட்கிறார். தொடர்ந்து பேசும் கமல், போட்ட சண்டைக்கான பதில சொல்லியாகணும் இல்லயா சனம் என்கிறார் கமல்.

சிரித்த பாலாஜி

சிரித்த பாலாஜி

அதற்கு விட்றலாம் சார் வேண்டாம் என்று கூறுகிறார் சனம். சனம் சொன்னதை சிரித்தப்படியே கேட்கும் கமல், நிறைய சண்டை இருக்கு.. நான் ஒரு ஆர்டர்ல போகலாம்னு இருக்கேன் என்கிறார். கமல் சொல்வதை கேட்டு பல்லைக் காட்டுகிறார் பாலாஜி.

சிரிப்ப ஆஃப் பண்ணுங்க

சிரிப்ப ஆஃப் பண்ணுங்க

அதனை பார்த்த கமல், அப்படியே சிரிப்ப ஆஃப் பண்ணுங்க பாலாஜி என்கிறார் கமல். உடனே பாலாஜியின் முகம் மாறுகிறது. தொடர்ந்து பேசும் கமல், திட்டினிங்க இல்லையா, ஞாபகம் இருக்கா வார்த்தை என்னன்னு? இந்த நேரம் எல்லாருக்கும் ஞாபகம் வந்திருக்கும்.

சாரி கேட்கும் பாலாஜி

சாரி கேட்கும் பாலாஜி

வேற ஏதாவது இருக்கா? ஒன்னுமே சொல்ல மாட்றீங்களே.. சிரிப்ப தானே குறைச்சுக்க சொன்னேன் பாலாஜி, பேச்ச குறைச்சுக்கிட்டீங்களே என கேட்டிகிறார் கமல். அதற்கு சாரி என்கிறார் பாலாஜி. இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X