இந்த மூன்று பேர்தான் ஃபைனல்ஸ்க்கு வரபோகிறார்களா? ஹவுஸ்மேட்ஸிடம் கமல் நடத்திய கருத்துக்கணிப்பு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாப் 2 இடங்களுக்கு தகுதியில்லாத நபர்கள் யார் என்பது குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார் கமல்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்கள் கடந்துள்ளது. இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் மட்டும் ஒரே அடியாக ஜித்தன் ரமேஷ், நிஷா என 2 பேர் எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மிக்சர் திண்ணிகள்

மிக்சர் திண்ணிகள்

இந்நிலையில் இன்னமும் சில போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகின்றனர். அவர்களை மிக்சர் என்று அழைத்து வருகின்றனர் ரசிகர்கள்.

தகுதியில்லாத 2 பேர்

தகுதியில்லாத 2 பேர்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலில் டாப் இரண்டு இடங்களுக்கு தகுதியில்லாத நபர்களை தேர்வு செய்யும்படி கூறினார் கமல். இதற்காக ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பேப்பரில் இரண்டு பேரின் பெயர்களை எழுதினர்.

முகமூடியை கழட்டல

முகமூடியை கழட்டல

அதன்படி அனிதா முதல் பெயராக கேபியின் பெயரை எழுதிய அவர், கேபியின் புதிய ஸ்ட்ரேட்டர்ஜியாக ரியோ டீம்முடன் சேர்ந்துள்ளதாக கூறினார். அடுத்து அர்ச்சனாவின் பெயரை கூறிய அனிதா அவர் இன்னும் முகமூடியை கழட்டவில்லை என்றார்.

தன் பெயரையே எழுதி

தன் பெயரையே எழுதி

அடுத்து பாலாஜி நிஷாவின் பெயரை எழுதினார். அதற்கு விளக்கமாக அவர் இந்த வீட்டில் டிப்பன்ட்டன்ட்டாக இருக்கிறார் என்றார். மேலும் அடுத்த பெயராக தன்னுடைய பெயரை எழுதிய பாலாஜி, இந்த வீட்டில் எதையெல்லாம் பண்ணக்கூடதோ அதையெல்லாம் பண்ணிவிட்டேன், ஆகையால் நான் ஃபைனலுக்கு தகுதியில்லாதவர் என்றார்.

ஆஜித் கணிப்பு

ஆஜித் கணிப்பு

மேலும் தன் பெயரை எழுதக் கூடாது என்றார் சோம் பெயர்தான் அவர் களத்தில் இறங்கி வேலை பார்க்கவில்லை என்றார். அடுத்த ஆஜித், நிஷா மற்றும் அனிதா ஆகியோர் டாப் இரண்டு இடங்களுக்கு தகுதியற்றவர்கள் என்றார்.

ஆரி கூறிய இருவர்

ஆரி கூறிய இருவர்

அவரை தொடர்ந்து பேசிய ரம்யா, நிஷா மற்றும் அர்ச்சனா டாப் 2க்கு செல்ல தகுதியற்றவர்கள் என்றார். ஷிவானி, கேபி மற்றும் அர்ச்சனா பெயரை குறிப்பிட்டு ஃபைனல்ஸ்க்கு தகுதியில்லை என்றார். ஆரி, அர்ச்சனா மற்றும் ரியோவுக்கு பிக்பாஸின் பைனல்ஸ்க்கு தகுதியில்லாதவர்கள் என்றார்.

எனக்கு தகுதியில்லை

எனக்கு தகுதியில்லை

தொடர்ந்து நிஷா, ஷிவானி மற்றும் சோம் ஆகிய இருவருக்கும் தகுதியில்லை என்றார். மேலும் அர்ச்சனா, நிஷாவையும் தன்னையும் கூறினார். அன்பை வைத்துக்கொண்டு இங்கு விளையாட முடியாது என்பதால் இந்த வீட்டில் தான் ஃபைனல்ஸ்க்கு தகுதியில்லை என்றார்.

ஆரிக்கு தகுதியில்லை

ஆரிக்கு தகுதியில்லை

அப்போது குறுக்கிட்ட கமல் உங்கள் பெயர் அல்லாத ஒருவர் என்றால் யாரை சொல்வீர்கள் என்று கேட்டார். அதற்கு ஆரியை சொல்வேன் என்றார். ஆரி மற்றவர்களின் குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பதால் அவர் ஃபைனல்ஸ்க்கு தகுதியில்லாதவர் என்றார்.

டாப் 3 போட்டியாளர்கள்

டாப் 3 போட்டியாளர்கள்

தொடர்ந்து பேசிய கேபி, நிஷா மற்றும் ஷிவானிக்கு தகுதியில்லை என்றார். சோமும் நிஷா மற்றும் ஷிவானியின் பெயர்களையே குறிப்பிட்டு தகுதியில்லை என்றார். ரியோ, நிஷா மற்றும் அனிதாவுக்கு டாப் 2க்கு தகுதியில்லை என்றார். இந்த கருத்துக் கணிப்பில் பாலா, ஆஜித், ரம்யா மூன்று பேரின் பெயர்களையும் யாரும் குறிப்பிடவில்லை. இதனால் அவர்கள் தான் டாப் 3 போட்டியாளர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X