பாஸ்ஸி விவகாரம்.. சுரேஷ் சக்கரவர்த்தி, சுச்சியையெல்லாம் இழுத்த அர்ச்சனா.. குட்டு வைத்த கமல்!
சென்னை: பாஸ்ஸி குமார் என்று கூறியதால் ரொம்பவே வருத்தப்பட்ட அர்ச்சனாவுக்கு நறுக்கென குட்டு வைத்தார் கமல்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் குமார்களில் எத்தனை குமார் உள்ளது என்பதை நடித்துக் காட்ட வேண்டும் என மார்னிங் ஆக்டிவிட்டி கொடுக்கப்பட்டது.
இதில் சோக குமார், கோப குமார் என பல குமார்களாக மாறினார் சோம். அப்போது சோமை மிரட்டுவது போல் நடித்தார் அர்ச்சனா.

அழுத அர்ச்சனா
அதனை பார்த்த கேபி பாஸ்ஸி குமார் என கண்டுபிடித்த ஆர்வத்தில் கத்திவிட்டார். இதனால் செம டென்ஷனாகிவிட்டார் அர்ச்சனா. அங்கேயே இனிமே என்னை பாஸ்ஸி குமார் என்று கூப்பிடாதே என கேபியை எச்சரித்தார். தொடர்ந்து நிஷாவிடமும் சொல்லி அழுத்தார்.

சில பேருக்கு பிடிக்கவில்லை
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அந்த விவகாரத்தை கையில் எடுத்தார் கமல், அப்போது பேசிய அவர் சில வார்த்தைகள் சில பேருக்கு பிடிக்கவில்லை. சொல்லவே கூடாது என்ற அளவுக்கு மெண்டல் சென்சார் உள்ளது. ரியோவுக்கு குரூப் என்றால் கோபம் வந்து விடும், அனிதாவுக்கு சண்டை என்றால் கோபம் வந்துடும். பாலாவுக்கு குழந்தைத்தனம் என்றால் கோபம் வந்துடும்.

நான் ஒரு புள்ளப்பூச்சி
இதுபோல் இப்போது புதுசா ஒரு வார்த்தை வந்துள்ளது. பாஸ்ஸி குமார என்றால் அர்ச்சனாவுக்கு பிடிக்கவில்லை என்றார். அதனைக் கேட்ட அர்ச்சனா, ஆமாம் சார், நான் பாட்டுக்கு அந்தப்பக்கம் சமைக்கிறேன், டாஸ்க்க பண்றேன், ஒரு புள்ளபூச்சி மாதிரி இருக்கேன். என்ன போய் அப்படி சொல்றாங்க என்று புலம்பினார்.

எப்படி அந்த எண்ணம் வந்துச்சு
உடனே கமல் கேபி உங்களுக்கு எப்படி அந்த எண்ணம் வந்துச்சு என்றார். அதற்கு எண்ணமெல்லாம் வரல சார் என்று அரண்ட கேபி, அவங்க நடிச்சது பாஸ்ஸி மாதிரி போல இருந்ததால, அதை கண்டுப்பிடிக்கணும் போல என்று அப்படி சொல்லிவிட்டேன் சார்.

ரம்யாவா?
ரம்யாவா? என்றார். மேலும் தான் கடந்த வாரம் சொன்னது என்ன என்பது குறித்தும் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து பேசிய அர்ச்சனா சனம் சொல்லியிருப்பார் என்று நினைப்பதாக கூறினார்.

சுச்சி கொடுத்த ஸ்மைலி
ஆனால் அதனை மறுத்த சனம், தான் பாஸ்ஸி குமார் என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை. டாமினென்ட் என்றுதான் கூறினேன் என்றார். தொடர்ந்து பேசிய அர்ச்சனா, இது சுரேஷ் கொளுத்திப்போட்ட பட்டாசு போல சார் என்றார். அப்போது பேசிய ரியோ சுச்சி ஸ்மைலி கொடுக்கும்போது சொன்னாங்க என்றார்.

விளையாட்ட எடுத்துக்கலாமே
இதையெல்லாம் கேட்ட கமல், அன்பு இவ்வளவு இருக்குற வீட்டுல இந்த சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஏன் கண்கலங்குறீங்க? ஏன் எமோஷனலாகுறீங்க? விளையாட்டா எடுத்துக்கலாம்மே என்றார். அதற்கு 300 தடவ அமைதியாதான் இருந்தேன் 301 தடவைதான் ஹர்ட் ஆகிட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











