ரெண்டு ரெண்டா போகுமோ.. கூண்டோடு கைலாசமோ.. சாட்டையை சுழற்றும் கமல்.. வெளியானது அடுத்த புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஹவுஸ்மேட்ஸ்களுடன் கலந்துரையாடும் கமல், கால் செண்டர் டாஸ்க்கை கையில் எடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பேசிய கமல், மாற்றி மாற்றி பேசுவதையும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லாமல் அவமானப்படுத்துவதையும் பார்த்தோம் என்றார்.

இதனால் பாலாஜி மற்றும் ஆரியை கேள்வி கேட்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

அடிநாதம் புரியலையா?

அடிநாதம் புரியலையா?

இதில் கால் செண்டர் டாஸ்க்கை கையில் எடுத்துள்ளார் கமல். இதில் பேசும் கமல், எனக்கும் உங்களை மாதிரியே நிறைய கேள்விகள் மனதில் நிற்கிறது என மக்களை பார்த்து சொல்கிறார். தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸுடன் பேசும் கமல் இந்த விளையாட்டின் அடிநாதம் புரியலையா என்று கேட்கிறார்.

பேசி வச்சுக்கிட்டு..

பேசி வச்சுக்கிட்டு..

மேலும் அனிதாவையும் பாலாவையும் சொல்லலாம் என சிரிப்புடன் சொல்கிறார். அவர் சொல்வதை பார்த்தால் இருவரும் புரிந்து விளையாடியதாக கூறுவதாக தெரிகிறது. தொடர்ந்து பேசும் கமல் கேபி அன்ட் சோம், பேசி வச்சுக்கிட்டு செஞ்சமாதிரி இருந்துச்சு.. எதுக்காக விட்டுக் கொடுத்தீங்க சோம் என்கிறார்.

கூண்டோடு கைலாசமோ

கூண்டோடு கைலாசமோ

தொடர்ந்து நிஷாவிடம் சென்ற கமல், உங்கள் சாயலில் இன்னொரு சகோதரி இருக்காங்களா? ரமேஷுக்கு நீங்க விட்டுக்கொடுக்கும் போது நிஷாவ காணும் என்று கூறுகிறார். மேலும் டீம் டீமா சேர்ந்துட்டிங்களோ? ரெண்டு ரெண்டா போகுமோ கூண்டோடு கைலாசமோ என எச்சரிப்பது போல் பேசியுள்ளார்.

கடந்த வாரம் பாராட்டு

கடந்த வாரம் பாராட்டு

கமல் பேச்சைக் கேட்டு, அனிதா மற்றும் பாலாஜியை தவிர மற்ற அனைத்து ஹவுஸ்மேட்ஸின் முகங்களும் அப்படியே மாறிவிடுகிறது. கடந்த வாரம் சோம் பேசியதை அவருக்காக கேபி விட்டுக்கொடுத்ததையும் ஸ்வீட் என பாராட்டிய கமல் இந்த வாரம் ஏன் விட்டுக்கொடுத்தீங்க என்று விளாசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X