twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.. கால் டாஸ்க்கில் நடந்த ஃபேவரிட்டிஸம்.. விளாசி விட்ட கமல்!

    |

    சென்னை: கால் செண்டர் டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததை பார்த்த கமல், விளாசி விட்டார்.

    பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 வாரங்களாக நடந்த கால் டாஸ்க் கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்த டாஸ்க்கில் சில போட்டியாளர்கள் மட்டுமே டாஸ்க்காக பார்த்து விளையாடினார்கள்.

    மற்ற போட்டியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை காப்பாற்றும் நோக்கில் தாங்களாகவே முன்வந்து காலை கட் செய்தனர். இதனை பார்த்த ரசிகர்கள், இதற்கு பெயர் டாஸ்க்கா என அதிருப்தி தெரிவித்தனர்.

    கேப்டன் டாஸ்க்கில் போங்காட்டம்.. குறும்படம் போட்டு பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட கமல்!கேப்டன் டாஸ்க்கில் போங்காட்டம்.. குறும்படம் போட்டு பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட கமல்!

    வண்டியும் ஒரு நாள்..

    வண்டியும் ஒரு நாள்..

    இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கால் டாஸ்க்கில் நடந்த கூத்துக்களையெல்லாம் கையில் எடுத்தார் கமர். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்ற பழ மொழியுடன் தொடங்கிய கமல், கடந்த வாரம் காலர்களாய் இருந்தவர்கள் இந்த வாரம் கால் செண்டர் ஊழியர்களாய் ஆனதை குறிப்பிட்டார்.

    மளிகைக் கடை லிஸ்ட்

    மளிகைக் கடை லிஸ்ட்

    தொடர்ந்து பேசிய கமல், சில சமயம் மருமகளுக்கு சாமி வந்துடும் மாமியாருக்கு சொல்ல வேண்டிய தெல்லாம் சொல்லி தீர்த்துடுவாங்க என்றார். அதற்கு உதாரணம் பாலாஜியும் அனிதாவும் என்றார். பாலாஜி, ஆரியை கடைசியில் பேச விடுகிறேன் என்று கூறி மளிகைக்கடை லிஸ்ட் போல் வாசிச்சார் என்றார்.

    நான்தான் பாராட்டினேன்

    நான்தான் பாராட்டினேன்

    தொடர்ந்து டாஸ்க்கை செய்ததாக ரியோவை பாராட்டினார். பின்னர் ஆஜித்தை காப்பாற்றியது ஏன் என அர்ச்சனாவிடம் கேட்க அவர் அதற்கான விளக்கத்தை கொடுத்தார். பின்னர் கேபி மற்றும் சோம் பக்கம் திரும்பிய கமல், போன வாரம் நான்தான் உங்களை பாராட்டினேன் என்றார்.

    குண்டோட போகப்போகுதோ

    குண்டோட போகப்போகுதோ

    இந்த வாரம் நீங்கள் செய்தது பண்ட மாற்றம் போல் இருந்தது. பேசி வச்சுட்டு காலை கட் பண்ணியது போல் இருந்தது. அதை பார்க்கும்போது டீம் டீமா பிரிஞ்சுட்டீங்களோ ரெண்டு ரெண்டா போகுதோ.. கூண்டோட போகப்போகுதோன்னு தோனுச்சு என்றார்.

    கட் பண்ண வேண்டும்

    கட் பண்ண வேண்டும்

    அதற்கு பதில் சொன்ன கேபி, சேவ் பண்ணனும்னுதான் கட் பண்ணேன். யாருக்கு கால் பண்ணாலும் வச்சுருப்பேன்.. அதை ரொம்ப ஹார்டா கொண்டுபோக விரும்பவில்லை என்றார். தற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சோம் அவருக்கு முன்பு கட் பண்ண வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது கொஞ்சம் லேட்டாகிவிட்டது என்றார்.

    உங்களுக்கு சகோதரி இருக்காங்களோ?

    உங்களுக்கு சகோதரி இருக்காங்களோ?

    உடனே குறுக்கிட்ட கமல், ஃபேன்ஸ் அசோஸியேஷன்லேருந்து ஒரு கால் வந்துச்சே என்றார். அதற்கு எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை சார். அதான் அந்த மாதிரி பேசினேன் என்றார். தொடர்ந்து நிஷா பக்கம் திம்பினார் கமல். உங்களுக்கு உங்கள் சாயலில் யாராவது சகோதரி இருக்காங்களோ என்று கேட்டார்.

    Recommended Video

    நண்பர்கள் என்மேல கோப பட்டாங்க | CLOSE CALL WITH ACTRESS SWARNAMALYA PART-01 |FILMIBEAT TAMIL
    ரமேஷ்கிட்ட காட்டலையே

    ரமேஷ்கிட்ட காட்டலையே

    அதற்கு ரொம்பவே தீவிரமாக யோசித்தார் நிஷா. பின்னர் இல்லை சார் என்றார். உடனே கமல், இல்லையே நான் யூட்யூப்பில் பேசின உங்களைப் போன்ற ஒருவர், உங்கள் பெயரில் உள்ள ஒருவரைதான் எதிர்பார்த்தேன். நிஷா மலேசியாவில் 1000 பேரை அப்படியே கட்டிப்போட்டு வைத்திருந்தார், அதில் என்னம்மா பேசியிருக்காங்க நிஷா. அந்த பேச்சு திறமையை ரமேஷ் கிட்ட காட்டலையே என்றார்.

    தனி ஆளா விளையாடுங்க

    தனி ஆளா விளையாடுங்க

    தொடர்ந்து பேசிய கமல் லக்ஸரி பட்ஜெட் பாயிண்ட்ஸில் 2000 இழந்துள்ளீர்கள். இப்போது பத்திய சாப்பாடு போல்தான் சாப்பிட வேண்டும். தனி ஆளா விளையாடுங்க.. உங்களுக்காக விளையாடுங்க.. மக்களின் பிரதிநிதியா சொல்கிறேன் என்றார் கமல்.

    English summary
    Kamal taken call task issue in the episode. He asked housemates why they did give up their calls.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X