பருப்பு சண்டை.. நீட்டி அளந்த அனிதா.. செமயாய் மொக்கை பண்ணிய கமல்.. அதிரடி புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆரி அனிதா பிரச்சனைக்கு அடுத்தப்படியாக நடந்த பெரிய சண்டை என்றால் கடலை பருப்பு சண்டைதான்.

சாம்பார் வைக்க துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பை ஊற வைத்த அனிதா, அதை வேறு எவற்றுக்கும் பயன்படுத்தாமல் வீணாக்கினார்.

குப்பையில் கொட்டவில்லை

குப்பையில் கொட்டவில்லை

மேலும் ஃபிரிட்ஜிலும் எடுத்து வைக்கவில்லை எடுத்து குப்பைத் தொட்டியிலும் போடாமல் இருந்தார். இதுகுறித்து ஆரி, வீட்டின் கேப்டனான பாலாஜியிடம் கேட்க அது குறித்து ரம்யாவிடம் விசாரித்தார் பாலாஜி.

ஆரி ஏன் வீணாக்கினார்?

ஆரி ஏன் வீணாக்கினார்?

அதற்கு விதண்டாவாதமாக பேசிய ரம்யா, ஆரி ஏன் அவருடைய சாப்பாட்டை வீணாக்கினார் என்று பதிலுக்கு கேள்வி கேட்டார். சமையல் பொருளை வீணாக்குவது தவறு என்றால் சமைத்த சாப்பாட்டை வீணாக்குவது தவறு இல்லையா என்றும் கேட்டு திசை திருப்பினார்.

இப்படிதான் நடக்கும்..

இப்படிதான் நடக்கும்..

ஆனால் அனிதாவோ பொறுப்பில்லாமல் பேசினார். இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை, எதற்கு இவ்வளவு இன்வெஸ்ட்டிகேட்ட பண்ணனும் என்றும் பாலாஜியிடம் எகிறினார். மேலும் இப்படிதான் நடக்கும் என்றும் பதில் அளித்தார்.

மன்னிப்பு கேட்க முடியாது

மன்னிப்பு கேட்க முடியாது

இதனால் கடுப்பான பாலாஜி, அனிதாவுடன் வாக்குவாதம் செய்தார். கடைசி வரை தான் செய்ததில் எந்த தவறும் இல்லை, ஆகையால் மன்னிப்பு கேட்க முடியாது என்று விடாப்பிடியாக இருந்தார் அனிதா.

பாலும் தெளிதேனும்..

பாலும் தெளிதேனும்..

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ரகளையாக ஆரம்பிக்கிறார் கமல். அதாவது, அவ்வையார் மாதிரி பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. என்று கூறிவிட்டு வாயில் கையை வைத்து ஏதோ தவறாக சொன்னதை போல் மூடிக்கொள்கிறார் கமல்.

ஆரிதான் கேட்டாரு..

ஆரிதான் கேட்டாரு..

தொடர்ந்து தப்பா சொல்லிட்டேனோ.. இந்த பருப்பு மேட்டரை கொண்டு வந்திருக்க கூடாது என்று இழுக்கிறார். அப்போது பேசும் பாலாஜி, ஆரி புரோ என்கிட்ட ஒரு விஷயம் கேட்டாரு.. பருப்பு நீ கொட்டினீயான்னு கேட்டாரு என்று ஆரிதான் சொன்னார் என்பதை அழுத்தமாக கூறினார்.

எனக்கு பிடிக்கல

எனக்கு பிடிக்கல

அப்போது குறுக்கிட்ட கமல் நாங்கள் எல்லாத்தையும் பார்த்து விட்டோம்.. புரியாம கேட்கல என்கிறார் கமல். அதற்கு பதில் சொல்லும் பாலாஜி, தவறு வந்து அவங்க இட் ஹேப்பன்ஸ் என்று அசால்ட்டாய் சொன்னது எனக்கு பிடிக்கல என்கிறார்.

அசிங்கப்படுத்திய கமல்

அசிங்கப்படுத்திய கமல்


உடனே குறுக்கிட்ட அனிதா, சார் நான் சாம்பார் வைக்கிறதுக்கு தெரியாம கடலைப் பருப்பை கொட்டிட்டேன். அப்புறம் வடை, செய்யலாம், கூட்டு செய்யலாம் என்று பிளான் பண்ணியிருந்தேன் என்று அளந்தார். அதை கேட்ட கமல் உங்களுக்கு அதெல்லாம் செய்ய தெரியுமா என்று கேட்ட அசிங்கப்படுத்திவிட்டடார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X