'ஹானஸ்ட்' விவகாரம்.. வெளியில் நடந்தது என்னன்னு எனக்கு தெரியுமே.. பாலா அன்ட் கேங்கை அலறவிட்ட கமல்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த ஹானஸ்ட் விவகாரம் குறித்து பாலாவை விளாசிவிட்டார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கின் போது, சோம் வைத்திருந்த பத்திரத்தை திருடினார் பாலாஜி.

இதனை பார்த்த கேபி, பாலா ஹானஸ்ட்டா சொல்லு, பத்திரத்தை நீதானே எடுத்தாய் என்றார். அதற்கு ஆமாம் நான்தான் வைத்திருக்கிறேன் என்று கூறி விட்டு சென்றார்.

ஏற்றிவிட்ட சுச்சி ஷிவானி

ஏற்றிவிட்ட சுச்சி ஷிவானி

வெளியில் சென்ற பாலாவிடம் சுச்சியும் ஷிவானியும் சேர்ந்து உன்னுடைய ஹானஸ்ட்டியை பற்றி பேசுகிறார்கள். நீங்கள் எடுக்கும் போது மட்டும் ஏன் அங்கு ஹானஸ்ட் என்ற பிரச்சனை வருகிறது என கேட்டு ஏற்றி விட்டனர்.

நேர்மையை பற்றி பேசவில்லை

நேர்மையை பற்றி பேசவில்லை

அதனைக் கேட்ட பாலாஜி, உள்ளே சென்று கேபியிடம் என்னுடைய ஹானஸ்ட்டியை பற்றி பேசினாயா என்று சண்டை போட்டார். அதற்கு ஹானஸ்ட்டா சொல்லு என்று தான் சொன்னேன் என கூறினார் பாலாஜி. மேலும் நேர்மையை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றார்.

விசாரித்த கமல்

விசாரித்த கமல்

ஷிவானியும் சுச்சியும் பாலாஜிக்கு ஆதரவாய் கேபி மற்றும் மற்ற ஹவுஸ்மெட்ஸுடன் மல்லுக்கு நின்றனர். இந்நிலையில் அந்த பிரச்சனை குறித்து விசாரித்தார் கமல். அப்போது நடந்ததை சொன்னார் கேபி.

வெளியே போன பிறகுதான்..

வெளியே போன பிறகுதான்..

கேபி சொன்னதை கேட்ட கமல், ஹானஸ்டுக்கும் ஹானஸ்ட்டிக்கும் என்ன வித்தியாசம் பாலா என கேட்டு பர்ஃபெக்ட் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து பேசிய கேபி, முதலில் கேட்டபோது பதில் சொல்லிவிட்டு போனார். வெளியே போன பிறகுதான் உள்ளே வந்துதான் கத்தினார் என்றார்.

கமல் ரியாக்ஷன்

கமல் ரியாக்ஷன்

அதற்கு கமல் வெளியே என்ன நடந்தது என்று கேட்டார். கேபி தெரியவில்லை என்றதும் வெளியே என்ன நடந்தது என்று எனக்கு தெரியுமே என்றார் கமல். இதனை கேட்டு மொத்த ஹவுஸ்மெட்ஸும் சிரித்து மகிழ்ந்தனர்.

அலறவிட்ட கமல்

அலறவிட்ட கமல்

ஆனால் பாலாஜி, சுச்சி மற்றும் ஷிவானியின் முகம் அப்படியே மாறிவிட்டது. இருவரும் தலையை குனிந்துவிட்டனர். ஒரு வார்த்தையை சொல்லி பாலாஜி கேங்கையே அலற விட்டுவிட்டார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X