மக்கள் தீர்ப்பு.. வின்னர் யார்.. பேழைக்குள் வரும் ரிசல்ட் கார்டு.. கண்ணடித்து கதறவிடும் கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் கடந்த சீசனை போலவே மற்ற போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு பரிசு வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் போட்டியாளர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றும் தெரிகிறது.

ரன்னர் பாலாஜி?
இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து ரம்யா, சோம் மற்றும் ரியோ ஆகியோர் வெளியே அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வின்னர் ஆரி, ரன்னர் பாலாஜி என்று தெரிய வந்துள்ளது.

வின்னர் கார்டு
இந்நிலையில் இன்றைய ஃபினாலேவுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பட்டுப் பேழையில் யார் வின்னர் என்ற அறிவிப்பு கார்டு அசத்தலாக வருகிறது. அதை அப்படியே திறந்து எடுக்கும் கமல் வின்னர் என்பதை மட்டும் நம்மிடம் காட்டிவிட்டு பாக்கெட்டுக்குள் உள்ளே வைக்கிறார்.

கடைசி நேரத்தில் கோல்மால்
மேலும் தனக்கே உரிய ஸ்டைலில் கண்ணடித்து கதறவிட்டுள்ளார். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள், யார் வெற்றியாளர் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் இருந்தாலும் கடைசி நேரத்தில் ஏதாவது கோல்மால் பண்ணிடுவீங்களா என்று கேட்டு வருகின்றனர்.

இந்தியாவில் முதல் முறையாக
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்தியாவில் முதல் முறையாக 23 கோடி ஒட்டு வாங்கிய ஆரி வாழ்த்துக்கள்.. நேர்மையாக இருந்தால் யாராலும் அவனது வெற்றியை தட்டி பறிக்க முடியாது என்பதற்கு பிக்பாஸ் 4 வெற்றியாளர் ஆரி சாட்சி! என பதிவிட்டுள்ளார்.

மக்கள் மனதை வென்று..
அதே நேரத்தில் பாலாவின் ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதாவது வெற்றி கோப்பை இரண்டாம்பச்சமே. எந்த பின்புலம் இல்லாமல், மீடியாவின் அடையாளம் இல்லாமல் தன் திறமையால், அவன் அவனாக இருந்து தன் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் தப்போ , சரியோ வெளிபடுத்தி மக்கள் மனதை வென்ற ஒருவன் பாலா. பாலா மாஸ் என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











