வேட்டி விவகாரத்தை கையிலெடுத்த கமல்.. சோக முகத்துடன் சுரேஷ்.. குலுங்கி குலுங்கி சிரித்த வேல்முருகன்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் கமல் வேட்டி விவகாரத்தை கையில் எடுத்து பேசும் போது சுரேஷ் சக்கரவர்த்தியின் முகம் வாடிப்போனது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை தோறும் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ் மேட்ஸ்களை சந்திப்பது வழக்கம்.
அதன்படி முதல் புரமோவில் சுரேஷ் சக்ரவர்த்தியை பாராட்டினார். இரண்டாவது புரமோவில், ரேகாவையும் சனம் ஷெட்டியையும் வெளுத்தார்.

சின்ன மனக்குறை
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் பேசும் கமல், அர்ச்சனாவிடம், எல்லாருக்கும் பட்டம் கொடுத்திங்க.. அதுல எனக்கு ஒரு சின்ன மனக்குறை இருந்ததுங்க என்கிறார்.

எல்லோருடைய முகமூடியும்
அதற்கு அர்ச்சனா சொல்லுங்கய்யா என்றார் பவ்யமாக.. என் பட்டத்தை எடுத்துக்கிட்டிங்க மக்களின் பிரதிநிதின்னு சொல்லி.. 3 சீசனா நான் சொல்லிட்டேன்.. இவங்க நம்பிட்டாங்க.. என்றார். தொடர்ந்து பேசிய கமல், சுரேஷ்.. எல்லாருடைய முகமூடியும் எப்போ கழல போகுது அப்படிங்ற ஆர்வத்துல இருப்பாங்க..

வாடிய முகம்
ஆனா வேட்டி அப்படி இல்ல.. அதுல கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்.. என்ன வேல்முருகன்.. என கேட்டு முடிக்கிறார். கமல் வேட்டி விவகாரத்தை கையில் எடுத்ததும் சுரேஷின் முகம் அப்படியே வாடி விட்டது. ஆனால் வேல்முருகன், அவருக்கு ஏதோ கமல் சப்போர்ட் செய்வதாக நினைத்து குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.

வெறும் பில்டப்புதான்
இதனை பார்த்த நெட்டிசன்கள், ஆண்டவரு..வெறும் பில்டப்புதான்.. போல..ஆளுங்களை பார்த்தா பம்முறாரு.. அவர் வாய்சவடால் எல்லாம் ஜூலிகிட்ட மட்டும்தான் போல... உடைச்சு பேசுங்க ஆண்டவரே.. என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











