ஆஜித்துக்கு முன்கூட்டியே எல்லாம் தெரிகிறதா... பலிக்குமா ஆருடம்.. சுற்றி வளைக்கும் கமல்!
சென்னை: ஆஜித்துக்கு எல்லாமே முன்கூட்டியே தெரிகிறதா என எவிக்ஷன் குறித்து சுற்றி வளைத்து பேசியுள்ளார் கமல்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் வெளியே அனுப்படுவது வழக்கம்.
ஹவுஸ்மேட்களால் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் குறைந்தளவு மக்களின் வாக்குகளை பெறும் போட்டியாளரே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

கடந்த வார சம்பவம்
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் நிகழ்ச்சியின் தொகுப்பாளாரான நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களின் எலிமினேஷனை ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் அறிவிப்பார். இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த நடிகல் கமல், கடந்த வாரம் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தார்.

எவிக்ஷன் அறிவிப்பு
குறிப்பாக நாடா காடா டாஸ்க்கின் போது சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரித்து யார் யாருக்கு என்னென்ன கிடைக்க வேண்டுமோ அதனை கொடுத்தார். இந்நிலையில் இன்று எவிக்ஷன் அறிவிப்பு குறித்த எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.

போனமுறை சரியாக இருந்தது
இதுதொடர்பான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பேசும் கமல் என்னிடமே பலர் போன் பண்ணி யார் எவிக்டானது என கேட்டு வருகின்றனர். போனமுறை அவருடைய கணிப்பு சரியாக இருந்ததால் நீங்கள் இம்முறையும் அவரிடம் கேட்டு வருகிறீர்கள்.

முன்கூட்டியே தெரிகிறதா?
நான் யாரை சொல்கிறேன்னு தெரியும், ஆஜித் நீங்களே சொல்லிடுங்கள் என்கிறார் கமல். அதற்கு எனக்கு தெரியவில்லை சார், நானாக கூட இருக்கலாம் என்கிறார் ஆஜித். அதற்கு பதிலளிக்கும் கமல், இவருக்கு எல்லாமே முன்கூட்டியே தெரிகிறதா என்பது இப்போது தெரிந்துவிடும் என்று எவிக்ஷன் குறித்து சுற்றி வளைத்து பேசுகிறார்.


Click it and Unblock the Notifications











