ஓபன் நாமினேஷன்.. அர்ச்சனா போட்ட நம்பர் கேம் கணக்கு.. எச்சரித்த கமல்.. பகீர் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பேசிய கமல் வீட்டின் உள்ளே போட்டியாளர்கள் விளையாட்டுக்களை நேர்மையாக விளையாடுகிறார்களா என்பதை உங்கள் பிரதிநிதியாக நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்றார்.
உங்கள் ஓட்டுதான் இந்த வீட்டை மாற்றப்போகிறது என்றும் கூறினார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

அர்ச்சனா பக்கம்..
இதில் பேசும் கமல் ஓபன் நாமினேஷன் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது நேரடியாக அர்ச்சனாவிடம் செல்லும் கமல், அர்ச்சனா நீங்கள் ஒரு புது பர்ஸ்பெக்ட்டிவ் கண்டு பிடிச்சீங்களே ஓபன் நாமினேஷனில் என்று கேட்கிறார்.

அனிதா சொன்ன பதில்
அதற்கு தெரியல சார் என்று அர்ச்சனா பதில் சொல்ல, உங்களின் எதிரணியினரின் கருத்தை கேட்போம் என்று அனிதாவிடம் கேட்கிறார் கமல். அதற்கு பதில் சொல்லும் அனிதா, தன்னை நாமினேட் செய்தவர்களின் பெயர்களை எல்லாம் கூறுகிறார்.

அர்ச்சனா விளக்கம்
அப்போது பேசும் அர்ச்சனா, நம்பர் கேம் என்பதை எங்கள் மேலேயே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதற்காக இதுக்கூட நம்பர் கேம் என்று சொல்லியிருப்பேன் சார் என்று விளக்கம் கொடுத்தார் அர்ச்சனா.

அர்ச்சனாவுக்கு எச்சரிக்கை
இதனை நக்கலாய் சிரித்தப்படியே கேட்ட கமல், நம்பர் கேம் நீங்கள் மட்டும்தான் விளையாடுறீங்கன்னு நினைக்காதீங்க. அங்கேயும் என மக்களை காண்பித்த கமல் அவங்க நம்பர் கேம் விளையாட ஆரம்பிச்சா, உங்களுடைய தனி பலம் சற்றே நெகிழ்ந்து போயிவிடும் என்று கூறுகிறார்.

எங்கே குரூப்பிஸம்?
இதில் முழுக்க முழுக்க அர்ச்சனா மட்டுமே ஃபோகஸ் செய்யப்பட்டுள்ளார். திங்கள் கிழமை நடைபெற்ற ஓபன் நாமினேஷனின் போது, எங்க குரூப்பிஸம் இருக்கு யார் நாமினேஷன் விளையாடுகிறார்கள் என்று பார் என ரியோவுக்கும் சோம்க்கும் விபூதி அடித்தார் அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











